இரு வார்டுகளுக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் நியமனம்: மறுக்காமல் பணியாற்ற மாநகராட்சி உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

18 செப்
2019
08:06
பதிவு செய்த நாள்
செப் 18,2019 00:09

சென்னை: சென்னையில், இரண்டு வார்டுகளுக்கு, ஒரு சுகாதார ஆய்வாளரை நியமனம் செய்துள்ள மாநகராட்சி, யாரும் மறுப்பு தெரிவிக்காமல் பணியாற்ற வேண்டும் என, அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதன் வாயிலாக, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சிபாரிசில், ஒரே வார்டில் சீட்டை தேய்த்தவர்களுக்கு, சிக்கல் ஏற்பட்டுள்ளது.



சென்னையின் உயிர் நாடிகளில் ஒன்று, சுகாதாரம். 'டெங்கு', மலேரியா உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்க, நவீன முறைகளை கையாள வேண்டியது அவசியமாக உள்ளது.ஆனால், மாநகராட்சி சுகாதாரத்துறையின் செயல்பாடு, சென்னை மக்களிடையே, கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இடமாற்றம்லோக்சபா தேர்தலுக்கு முன், மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளர்கள், இடமாற்றம் செய்யப்பட்டதில், முறைகேடு நடந்தது.இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, சுகாதாரத்துறை துணை ஆணையர், மதுசுதன்ரெட்டி, எந்த சிபாரிசும் இல்லாமல், சுதந்திரமாக, 'கவுன்சிலிங்' முறையில் இடமாற்றம் செய்தார். இதை, பலர் பாராட்டினர்.தேர்தல் முடிந்ததும், பல சுகாதார ஆய்வாளர்கள், மீண்டும் பழைய இடத்திற்கு செல்ல முயன்றனர். கடந்த மாதம், சிபாரிசில், மூன்று முறை இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.




இதனால், பெரிய வார்டுகள் மற்றும் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல் அதிகரித்துள்ள மண்டலங்களில், சுகாதார ஆய்வாளர்கள் பற்றாக்குறை அதிகரித்தது.எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் மூலம், சிபாரிசு வந்ததால், மாநகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரத் துறை துணை ஆணையரால், சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.இது குறித்தும், நம் நாளிதழில் செய்தி வெளியானது.



இதையடுத்து, ரிப்பன் மாளிகையில், உள்ளாட்சித்துறை அமைச்சர், வேலுமணி தலைமையில், சமீபத்தில் கூட்டம் நடந்தது. இதில், கொசு ஒழிப்பு நடவடிக்கை மற்றும் இடமாறுதல் குறித்து, தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.


துணை ஆணையர்




இதைத் தொடர்ந்து, சுகாதார ஆய்வாளர்கள் இடமாறுதலில், சில மாற்றங்கள் செய்துள்ளனர். குடும்ப சூழல் கருதி, சில பெண் சுகாதார ஆய்வாளர்களுக்கு, இடமாறுதலில் சலுகை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், ஒரு சுகாதார ஆய்வாளர், இரண்டு வார்டுகளில் பணிபுரிய வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. மாநகராட்சியில், 200 சுகாதார ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், 106 பேர் தான் தற்போது உள்ளனர். சிபாரிசில், 'ஒரு வார்டு தான் பார்ப்பேன்' என, விருப்ப வார்டு கேட்டு, 30க்கும் மேற்பட்டோர் இடமாறுதலில் சென்றனர்.இதனால், பிற சுகாதார ஆய்வாளர்கள், 3, 4 வார்டு களை, சேர்த்து பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒரு சுகாதார ஆய்வாளர், இரண்டு வார்டில் பணிபுரிய வேண்டும் என, துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதோடு, பணிபுரிபவர்கள் தன்மை அறிந்து, இரண்டு வார்டு வீதம் ஒதுக்க, மண்டல சுகாதார அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது, தேனாம்பேட்டை, அடையாறு மண்டலத்தில், இடமாறுதல் நடைபெற்று வருகிறது.



நம்பிக்கை




இதை தொடர்ந்து, அடுத்தடுத்த மண்டலங்களில், இடமாறுதல் செய்யப்பட உள்ளனர். மேலும், பூச்சியியல் வல்லுனர்களையும், இடம் மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், ஒரு சுகாதார ஆய்வாளர், இரண்டு வார்டில் பணி புரிவதால், சுகாதார நடவடிக்கை தொய்வு இல்லாமல் நடக்கும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X