பரமக்குடியில் உணவுப் பாதுகாப்புஅதிகாரிகள் அதிரடி சோதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2019
00:10

பரமக்குடி : பரமக்குடி பஸ் ஸ்டாண்ட், பெரிய பஜார் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.




பரமக்குடியில் ஓட்டல்கள், பெட்டிக் கடைகள்,பேக்கரி மற்றும் புரோட்டா கடைகள் என உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் டாக்டர் சிவராம பாண்டியன் தலைமையில்ஆய்வு செய்தனர். அவருடன் முத்துச்சாமி, கர்ணன், வீரமுத்து, லிங்கவேல், ஜெயராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் சென்றனர்.சோதனையின் போது, காலாவதியான உணவுப் பொருட்கள், தயாரிப்பு மற்றும் பொருட்களின் முடிவு தேதி இல்லாதவற்றை பறிமுதல் செய்தனர்.




பெட்டிக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட தடைசெய்யப்பட்டபான்பராக், குட்கா போன்ற புகையிலை பொருட்கள், ஓட்டல்களில் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த மாமிச உணவுகள், மாவுகளை கைப்பற்றி அழித்தனர்.தொடர்ந்து உணவு தயாரிக்கும் மாஸ்டர்களிடம் சுத்தமாக இருக்கவேண்டும் என்றும், சுகாதாரமான முறையில் உணவு சமைக்க வேண்டும் என அறிவுறுத்தினர். தண்ணீர் தொட்டிகளை பராமரிக்க கேட்டுக்கொண்டனர்.



இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட கடைகளை ஆய்வு செய்தஅதிகாரிகள், உணவுப் பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்தகடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி சென்றனர். மீண்டும் மறுமுறை ஆய்வின் போது தவறுகள் கண்டறிப்பட்டால் நீதிமன்ற வழக்கு தொடரப்படும், என எச்சரித்தனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X