| நீர்வழிப்பாதையில் தடுப்பணைகள் கூடலுார் மக்கள் மன்றம் வலியுறுத்தல் Dinamalar
நீர்வழிப்பாதையில் தடுப்பணைகள் கூடலுார் மக்கள் மன்றம் வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
00:14

கூடலுார் : நீர்வழிப்பாதையில் தடுப்பணைகள் அமைக்க அரசை வலியுறுத்தி, கூடலுார் மக்கள் மன்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கூடலுார் மக்கள் மன்றம் பொதுக்குழு கூட்டம் தலைவர் மதார்ஷா தலைமையில் நடந்தது. துணை செயலாளர் நடையன் வரவேற்றார். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசிற்கு மனு அனுப்புவது, லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு ராட்சத குழாய் மூலம் நேரடியாக குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடுவது, நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த நீர்வழிப்பாதையில் தடுப்பணைகள் கட்டுவது, கறிக்கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு வணிக வளாகம் கட்டுவது, சுருளி அருவியில் உயர்த்தப்பட்ட நுழைவுக்கட்டணத்தை குறைப்பது உள்ளிட்டவற்றில் அரசை வலியுறுத்துவது போன்ற 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். செயலாளர் புதுராஜா, பொருளாளர் திலகர், துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் கணேசன், தங்கராசு, திராவிடமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X