| தொழுநோயாளிகளுக்கான ஊனத்தடுப்பு முகாம் Dinamalar
தொழுநோயாளிகளுக்கான ஊனத்தடுப்பு முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
00:16

கம்பம் : கம்பம் அரசு மருத்துவமனையில் தொழுநோயாளிகளுக்கான ஊனத்தடுப்பு மற்றும் மறுவாழ்வு முகாம் நடைபெற்றது.


மருத்துவ அலுவலர் ஜெ.பொன்னரசன் தலைமை வகித்தார். மாவட்ட தொழுநோய் துணை இயக்குநர் ரூபன்ராஜ் முன்னிலை வகித்தார். கிரீன்வேலி ரோட்டரி சங்க தலைவர் ஜேம்ஸ் ஸ்டான்லி ஜாய் வரவேற்றார். கம்பம் பகுதியில் தொழு நோயாளிகளாக கண்டறியப்பட்டு, மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருப்போர், ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்கும் உடல் ஊனம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இது ஏற்பாடு செய்யப்பட்டது. புண்களை எவ்வாறு பராமரிப்பது, கைகால்கள் சுருங்குவது மற்றும் நரம்புகள் பாதிப்பை தடுப்பது குறித்து பயிற்சிகள், உபகரணங்கள் வழங்கப்பட்டன.


கிரீன்வேலி ரோட்டரி சங்கம் சார்பில் போர்வைகள், துண்டுகளை அதன் தலைவர் வழங்கினார். தேவைப்படுவோருக்கு ஊனத்தடுப்பு அறுவை சிகிச்சை செய்வதற்கு பரிந்துரை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சித்தா டாக்டர் சிராசுதீன், ரோட்டரி சங்க செயலா ளர் காசிராசன், பொருளாளர் முத்துக்கிருஷ்ணன், தொண்டு நிறுவன நிர்வாகி சாதிக் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X