வாலிபர் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2019
00:37

சிவகங்கை : தேவகோட்டையில் கத்தியால் குத்தி வாலிபரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.ஆயிரம் அபராதம் விதித்து சிவகங்கை செஷன்ஸ் நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.தேவகோட்டை கருதாவூரணியை சேர்ந்தவர் முத்து.



இவர் கடந்த 2010 ஆக.,9ம் தேதி நடராஜபுரம் சின்னமுத்துமாரியம்மன் கோயில் விழாவிற்கு ஒலிபெருக்கி அமைத்துள்ளார். இவருக்கு உதவியாக முத்துமகன் கார்த்திக் 20, இருந்துள்ளார். அன்று மதியம் திருவிழா தொடர்பாக சுப்பையா மகன் ஜெயராமனுக்கும் 49, முத்துவிற்கும் ஒலி பெருக்கி சப்தம் தொடர்பாக இரவு 10:15 மணிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.இத்தகராறை ஒலி பெருக்கி இயக்கும் பணியில் இருந்த அவரது மகன் கார்த்திக் தடுத்து, இருவரையும் விலக்கியுள்ளார்.



இதில் ஆத்திரமுற்ற ஜெயராமன், அவருடன் வந்த முருகேசன், தொண்டியை சேர்ந்த கோவிந்தராஜன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கார்த்திக்கை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இக்கொலை வழக்கு தொடர்பாக தேவகோட்டை நகர் போலீசார் விசாரித்து வந்தனர்.இந்த வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி கார்த்திகேயன், கொலை வழக்கில் தொடர்புடைய ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.



இவ்வழக்கில் தொடர்புடைய முருகேசன்,இறந்த கோவிந்தராஜன் இருவரையும் விடுவித்தார். இதில் ஜெயராமன் ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் மதுரை சிறையில் உள்ளார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X