| மணியார்டரில் பரிசுத் தொகை ஆசிரியர், மாணவர்கள் மகிழ்ச்சி Dinamalar
மணியார்டரில் பரிசுத் தொகை ஆசிரியர், மாணவர்கள் மகிழ்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
00:40

மானாமதுரை : மானாமதுரை அருகேயுள்ள தெ.புதுக்கோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகையை மணியார்டரில் அனுப்பினார்.



இதை பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.தெ.புதுக்கோட்டை எம்.கே.என்., நடுநிலைப்பள்ளியில் துாய்மை இந்தியா திட்டம் சார்பாக பல்வேறு போட்டிகள், கருத்தரங்கு ஊர்வலம் நடைபெற்றன.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் மாணவர்கள் பெயருக்கு பரிசுத் தொகையை மணியார்டர் அனுப்பினார். தபால்காரர் பள்ளிக்கு வந்து மணியார்டர் வந்த10 மாணவர்களை அழைத்து தொகையை வழங்கினார்.பெற்றுக்கொண்ட மாணவர்கள் முதன் முதலாக பள்ளிக்கு மணியார்டரில் பணம் பெற்றது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்து தலைமை ஆசிரியர் சிவகுருநாதனுக்கு நன்றி தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X