| திறக்கப்படாத உழவர் சந்தை Dinamalar
திறக்கப்படாத உழவர் சந்தை
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
00:42

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட உழவர் சந்தை கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் வீணாகி வருகிறது.




சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் இங்கு கிருங்காக்கோட்டை விலக்கு அருகே உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக 20 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்ட போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது. தி.மு.க. அரசின் திட்டமான உழவர்சந்தையை திறக்க அடுத்து வந்த ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டாமல் கிடப்பில் போட்டனர்.



இந்த உழவர் சந்தையில் 20 கடைகள், ஒரு அலுவலகம், வாகன நிறுத்தம், கழிப்பறை என சகல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. ஆனால் உரிய நேரத்தில் திறப்புவிழா காணாததால் அனைத்து கட்டடங்களும் வீணாகி வருகிறது. இந்த உழவர் சந்தை திறக்கப்படாததால் இப்பகுதி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த காய்கனிகளை தினசரி சந்தைப்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். வாரச்சந்தைகளை நாடி செல்ல வேண்டியுள்ளது.



தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற காரணத்தினால் தான் அடுத்தடுத்து வந்த அ.தி.மு.க அரசு கட்டி முடிக்கப்பட்ட உழவர் சந்தையை திறக்காமல் வீணடித்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X