குடிநீர் பிரச்னையை கண்டித்து மறியல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2019
01:08

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குடிநீர் பிரச்னையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.



கள்ளக்குறிச்சி நகராட்சி 16, 17, 18வது வார்டு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதிகளுக்கு ரிஷிவந்தியம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு நீரேற்றம் செய்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 11:10 மணியளவில் காலி குடங்களுடன் சேலம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று முறையிடும்படி கூறினர்.இதனையடுத்து, அங்கிருந்த 11:40 மணிக்கு கலைந்து சென்று, நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.கமிஷனர் சையத் முஸ்தபா கமால், பேச்சுவார்த்தை நடத்தினார்.அதில், கவரை தெருவில் உள்ள கிணற்றை சுத்தம் செய்து குடிநீர் வழங்க வேண்டும், நாள் தோறும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.குடிநீர் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், கள்ளக்குறிச்சியில் பரபரப்பு நிலவியது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X