| மாவட்டத்தில் இலவச மடிக்கணினி திட்டத்திற்கு... ரூ.233 கோடி! 1.55 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் Dinamalar
மாவட்டத்தில் இலவச மடிக்கணினி திட்டத்திற்கு... ரூ.233 கோடி! 1.55 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விநியோகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
01:09

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 2011-12ம் ஆண்டு முதல் 2017-18ம் ஆண்டு வரை, ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 988 மாணவ, மாணவியர்களுக்கு, அரசு சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.



மாவட்டத்தில் 179 அரசு பள்ளிகள், 3 நகராட்சி பள்ளிகள், 77 முழு நிதியுதவி பெறும் பள்ளிகள் (சுயநிதி பிரிவு தவிர்த்து) என மொத்தம் 196 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் 2011-12ம் ஆண்டு 23 ஆயிரத்து 996 மாணவர்களுக்கு 33 கோடியே 44 லட்சத்து 80 ஆயிரத்து 244 ரூபாய் மதிப்பீட்டிலும்; 2012-13ம் ஆண்டு 25 ஆயிரத்து 369 மாணவர்களுக்கு 42 கோடியே 59 லட்சத்து 45 ஆயிரத்து 510 ரூபாய் மதிப்பீட்டிலும் வழங்கப்பட்டுள்ளது.



2013-14ம் ஆண்டு 24 ஆயிரத்து 35 மாணவர்களுக்கு 40 கோடியே 35 லட்சத்து 47 ஆயிரத்து 650 ரூபாய் மதிப்பீட்டிலும்; 2014-15ம் ஆண்டு 26 ஆயிரத்து 162 மாணவர்களுக்கு 37 கோடியே 6 லட்சத்து 89 ஆயிரத்து 378 ரூபாய் மதிப்பீட்டிலும்; 2015-16ம் ஆண்டு 25 ஆயிரத்து 762 மாணவர்களுக்கு 36 கோடியே 50 லட்சத்து 21 ஆயிரத்து 778 ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.



2016-17ம் ஆண்டு 30 ஆயிரத்து 293 மாணவர்களுக்கு 42 கோடியே 92 லட்சத்து 21 ஆயிரத்து 517 ரூபாய் மதிப்பீட்டிலும்; 2017-18ம் ஆண்டு 371 மாணவர்களுக்கு 51 லட்சத்து 71 ஆயிரத்து 369 ரூபாய் மதிப்பீட்டிலும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.



இதேபோல் 2018-19ம் ஆண்டு 28 ஆயிரத்து 491 மாணவர்களுக்கும், 2019-20ம் ஆண்டு 26 ஆயிரத்து 550 பிளஸ் 1 மாணவர்களுக்கும், பிளஸ் 2 மாணவர்கள் 26 ஆயிரத்து 569 பேருக்கும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது.மாவட்டத்தில், கடந்த 2011-12ம் ஆண்டு முதல் 2017-18ம் ஆண்டு வரை, ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 988 மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் மடிக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X