| சென்னையில், 7,000 பேனர்கள் அகற்றம் Dinamalar
சென்னையில், 7,000 பேனர்கள் அகற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
01:19

சென்னை:''சென்னையில் இதுவரை, 7,000 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. அனுமதியற்ற பேனர்கள், ரோந்து வாகனங்கள் வாயிலாக கண்காணிக்கப்படுகிறது,'' என, மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் கூறினார்.



தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளும், சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதி நிதிகளுடன், ரிப்பன் மாளிகையில், கமிஷனர் பிரகாஷ், நேற்றுஆலோசனை நடத்தினார்.இது குறித்து, கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது:வாக்காளர்கள், தங்கள் விபரங்களை, 'voter helpline' என்ற, 'மொபைல் ஆப்' வழியாக, தாங்களாகவே திருத்தங்கள் மேற்கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள், 1950 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவை, 30ம் தேதி வரை அமலில் இருக்கும்.வாக்காளர்கள் மேற்கொள்ளும் திருத்தங்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால், கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.சென்னையில், அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் காரணமாக, சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்துக்கு பின், 15 மண்டலங்களை, மூன்று கட்டங்களாக பிரித்து, ரோந்து பணிகள் நடைபெறுகின்றன. இதுவரை, 7,000 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. வட்டாரம் வாரியாக பேனர்களை அகற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பொதுமக்களிடமிருந்தும், தொலைபேசி வாயிலாக, பேனர்கள் தொடர்பாக, 1,000க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன.அதன் அடிப்படையிலும், பேனர்கள் அகற்றப்படுகின்றன. சென்னை சாலைகளில், குடிநீர் வாரியம், பாதாள சாக்கடை, தொலைபேசி இணைப்பு கம்பி உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X