| கோட்ட வருவாய் நிர்வாக அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் Dinamalar
கோட்ட வருவாய் நிர்வாக அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
01:20

விழுப்புரம்: விழுப்புரத்தில், கோட்ட அளவிலான வருவாய் நிர்வாக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.



விழுப்புரம், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் கணேஷ், பார்த்திபன், தங்கமணி முன்னிலை வகித்தனர். விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார் பகுதிகளைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர்கள், நில அளவையர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், முதல்வர் சிறப்பு குறைகேட்பு திட்ட பணிகளை விரைந்து முடித்தல், பட்டா மாற்றம், முதியோர் ஓய்வூதியம், பிறப்பு, இறப்பு சான்று உள்ளிட்ட அனைத்து வகையான இ-சான்றுகளை விரைந்து வழங்க தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X