| வி.ஏ.ஓ., மீது புகார் Dinamalar
வி.ஏ.ஓ., மீது புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
01:21

ஆதம்பாக்கம்:ஆதம்பாக்கம், கிராம நிர்வாக அலுவலர் மீது, தாசில்தாரிடம், பொதுமக்கள் தரப்பில் புகார் செய்யப்பட்டுள்ளது.ஆலந்துார், எம்.கே.என்., சாலையில், ஆலந்துார், பரங்கிமலை, ஆதம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது.இதில், ஆதம்பாக்கம் தவிர, மற்ற கிராம நிர்வாக அலுவலகங்கள், முறையாக இயங்குகின்றன.ஆதம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலகம், தாமதமாக திறக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அந்த அலுவலகத்தில் பல்வேறு சான்று பெறுவதற்காக, பொதுமக்கள் நேற்று காலை, 10:00 மணி முதல் காத்திருந்தனர். இரண்டு மணி நேரமாகியும், கிராம நிர்வாக அலுவலர், கவிதா வராததால், பொதுமக்கள் தவித்தனர்.இது குறித்து, ஆலந்துார் தாசில்தார் ராஜேஸ்வரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X