| கட்டண மோசடி பல்கலை ஊழியர் நீக்கம் Dinamalar
கட்டண மோசடி பல்கலை ஊழியர் நீக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
01:24

சென்னை:சென்னை பல்கலையில், மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து, போலி ரசீது வழங்கிய புகாரில், பல்கலை ஊழியரை, கட்டாய பணி விடுவிப்பு செய்ய, சிண்டிகேட் முடிவு செய்துள்ளது.



சென்னை பல்கலையின் சிண்டிகேட் கூட்டம், துணைவேந்தர், துரைசாமி தலைமையில் நடந்தது. இதில், உயர் கல்வி துறை செயலர், மங்கத்ராம் ஷர்மா, பதிவாளர், சீனிவாசன், உறுப்பினர்கள், ஜோதி சிவஞானம், சுந்தரம், மணிவாசகன் உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், சென்னை பல்கலை ஊழியர் செழியன், மாணவர்களை ஏமாற்றி மோசடி செய்தது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. எம்.சி.ஏ., துறையில், உதவியாளராக பணியாற்றும் அவர், படிப்பில் சேர வந்த மாணவர்களிடம், கல்வி கட்டணம் வசூலித்து, அவர்களுக்கு போலி ரசீது வழங்கியதாக, 2018ல் புகார் எழுந்தது. இதையடுத்து, செழியன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதுகுறித்து, கமிட்டி அமைத்துவிசாரித்ததில், அவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டது. செழியனை பணியில் இருந்து கட்டாய விடுவிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. அவர் கையாடல் செய்த தொகை, ஏற்கனவே வசூலிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X