| பல்கலையில் கருத்தரங்கம் Dinamalar
பல்கலையில் கருத்தரங்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
01:27

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை இயற்பியல் துறை சார்பில் நிலையான எரிசக்தி மற்றும் சென்சாருக்கான மேம்பட்ட பொருட்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கு தொடக்க விழா நடைபெற்றது.துணைவேந்தர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மணிசங்கர். ஜப்பான் தோஹோகு பல்கலை இயல் பொருள் அறிவியல் துறை பேராசிரியர் சடோஷி உதா, சிங்கப்பூர் நாங்யாங் பல்கலைக் இயற்பியல் கணிதஅறிவியல் துறை பேராசிரியர் பிரம்மநாயகம், அமெரிக்க லமர் பல்கலை.,இயந்திரவியல் துறை பேராசிரியர் ரமேஷ் கே குடுரு ஆகியோர் பேசினர்.நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மோகன்ராவ், நடராஜன், அரவிந்தன் மற்றும் இந்திய அளவில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்தும், அயல்நாட்டு பல்கலைக்கழகங்களில் இருந்தும் பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் கலந்து கொண்டனர். 150 ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்கு மலரை துணைவேந்தர் வெளியிட்டார். பேராசிரியர் சங்கரநாராயணன் கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். பேராசிரியர் ரவி வரவேற்றார். உதவி பேராசிரியர் யுவக்குமார் நன்றி கூறினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X