| ஜவுளி பூங்காவுக்கு பூமி பூஜை Dinamalar
ஜவுளி பூங்காவுக்கு பூமி பூஜை
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
01:30

காரியாபட்டி : காரியாபட்டி அருகே ஜவுளி பூங்காவுக்கு பூமி பூஜை நடக்க போவதாக கிளம்பிய வதந்தியால் 13 கிராம மக்கள் போராட்டம் நடத்த திரண்டனர்.



காரியாபட்டி தாமரைக்குளம் பொட்டல்பட்டியில் 120 ஏக்கரில் 170 கோடி செலவில் தென்மாவட்ட ஜவுளி பதனிடும் குழுமம் மற்றும் ஜவுளி பூங்கா அமைக்க ஆக. 26ல் முதல்வர் பழனிச்சாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டினார். இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் சமரசப்படுத்தினர். இந்நிலையில் ஜவுளி பூங்காவிற்கு பூமி பூஜை நடக்கப் போவதாக கிளம்பிய வதந்தியால் தாமரைக்குளம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் போராட்டம் நடத்த திரண்டனர்.



மக்கள் கூடியதை அறிந்த திருச்சுழி டி.எஸ்.பி.,சசிதர் மற்றும் போலீசார் பூமி பூஜை எதுவும் இல்லை என தெரிவித்தும் மக்கள் கலைந்து செல்ல மறுத்து மாலை வரை அங்கேயே இருந்தனர். யாரும் வராததால் கலைந்து சென்றனர். பொது மக்கள் கூறுகையில், 'முழுக்க விவசாயத்தை நம்பி இருக்கிறோம். சாயப்பட்டறை அமைத்தால் நிலங்கள் பாழாகிவிடும். வருங்கால சந்ததியினர் இங்கு வாழ முடியாது. ஜவுளி பூங்கா அமைக்க விடமாட்டோம்,' என்றனர்.



ஜவுளி பூங்கா அமைப்பாளர்கள் கூறுகையில்,' இங்கு ஜவுளி பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டு அனைவரின் ஒத்துழைப்போடுதான் துவக்குவோம். மக்கள் மத்தியில் பிரச்னையை ஏற்படுத்த யாரோ வதந்தியை கிளப்பி உள்ளனர். எந்த சூழ்நிலையிலும் மக்கள் ஆதரவை பெறாமல் துவக்கமாட்டோம்,' என்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X