| குப்பை சேகரிக்க இடமில்லாமல் சிரமம் Dinamalar
குப்பை சேகரிக்க இடமில்லாமல் சிரமம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
01:35

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி குப்பை கிடங்கு மூடப்பட்டதால், குப்பை சேகரிக்க இடமில்லாமல், துப்புரவு பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் சேரும் குப்பையை, பல ஆண்டுகளாக, திருக்குளம் குப்பை கிடங்கில் சேமித்து வருகின்றனர். சமீபகாலமாக பிளாஸ்டிக் பைகள் அதிகரித்ததால் குப்பை மக்காமல் மலைபோல் குவிந்துள்ளது.குப்பையை தரம் பிரித்து உரம் தயாரிப்பதற்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு, மேல்பாதியில் இடம் வாங்கினர்.அங்கு 80 லட்சம் செலவில் சிமண்ட் களம் அமைத்தனர். அதிகாரிகள் அலட்சியத்தால் ஒரு நாள் கூட குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி நடக்கவில்லை.தொடர்ந்து திருக்குளம் பகுதியிலேயே குப்பையை சேமித்து வந்தனர்.இந்நிலையில் அங்குள்ள குப்பையை முழுவதும் அகற்றிவிட்டு அந்த இடத்தை பூங்காவாக மாற்ற வேண்டும்.இனி பிளாஸ்டிக் பைகளை ஒழித்து முறையாக குப்பையில் இருந்து உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.அதை தொடர்ந்து திருக்குளம் குப்பை கிடங்கில் உள்ள குப்பையை தரம் பிரித்து உரம் தயாரிக்கவும் மீதியை அகற்றி தரவும் 86 லட்சத்துக்கு டெண்டர் விட்ப்பட்டது.எனவே இனி அங்கு குப்பையை கொட்டக் கூடாது என அந்த தனியார் நிறுவனம் கூறியதால் அதை பூட்டி விட்டனர்.நகராட்சி பகுதியில் சேரும் குப்பையை கொட்ட இடமில்லாததால் துப்புரவு பணியாளர்கள் சிரமபடுகின்றனர். காலியாக உள்ள தனியார் இடங்களில் கொட்டுவதோடு சில இடங்களில் தீயிட்டு கொளுத்துகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்போடு நோய் பரவும் அபாயமும் உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இதே நிலை நீடித்தும் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக உள்ளனர். இப் பிரச்னைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X