| போலீஸ் செய்திகள் Dinamalar
போலீஸ் செய்திகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
01:35

ஸ்டார் ஓட்டலில் 'மஜா'மதுரை: ரயில்வே ஸ்டேஷன் அருகில் ஸ்டார் ஓட்டல்ஒன்றில் ஸ்பா என்ற பெயரில் இயங்கிய மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடந்ததை போலீசார் உறுதிசெய்தனர். இதுதொடர்பாக எச்.எம்.எஸ்., காலனி ஹரிஹரன் 21, சத்யசாயிநகர் கார்த்திக் 30, புதுார் லுார்துநகர் மணிகண்டன் 33, உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்பா நிர்வாகி முத்துராஜ் தலைமறைவானார். 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் மீது வழக்குமதுரை: தத்தனேரி மெயின் ரோட்டில் இ.எஸ்.ஐ.,மருத்துவமனை எதிரில் நகரின் அழகை கெடுக்கும்வகையில் நடிகர் விஜய் ரசிகர் மன்ற மாவட்ட பொருளாளர் சதீஷ்குமார் ஏற்பாட்டில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.



இதுதொடர்பாக போஸ்டர் ஒட்டிய தத்தனேரி ஜெய்கார்த்திக் 36, கைது செய்யப்பட்டார். சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.பேனர் வைத்தவர் கைதுமதுரை: நகரில் அனுமதியின்றி பேனர் வைக்க தடை உள்ள நிலையில், பொன்னகரம் மதுரா கோட்ஸ் பாலம் அருகில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அப்பகுதி ராஜா 47, கரிமேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.நகை பறிப்புமதுரை: தெற்குவெளிவீதி சுதா 21. நேற்றுமுன்தினம் மாலை 4:20 மணிக்கு அப்பகுதி கிருஷ்ணன் கோயில் அருகே நடந்துவந்தபோது, டூவீலரில் வந்த 2 பேர், இரண்டு பவுன் செயினை பறித்துச்சென்றனர். தெற்குவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.


திருட முயன்றவர் கைது திருமங்கலம்: பொற்கால நகர் காளிதாஸ் 36, இவரது வீட்டில் பெரிய ஆலங்குளம் மணிகண்டன் மகன் சதீஷ்குமார் 26, பூட்டை உடைத்து திருட முயன்றதாக கைது செய்யப்பட்டார்.மாணவர் பலிசோழவந்தான்: செக்கானுாரணி மகேஸ்வரன் மகன் தினேஷ் 19. கல்லுாரி மாணவர். நேற்று காலை முள்ளிப்பள்ளம் வைகை ஆற்று தடுப்பணையில் உறவினருக்கு திதி கொடுக்க வந்தார். பின் தேங்கிய நீரில் நண்பர்களுடன் குளித்தபோது மூழ்கி இறந்தார். சோழவந்தான்தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் 7 மணிநேரம் தேடலுக்கு பின் உடலை மீட்டனர்.


காணாமல் போனவர் அழுகிய நிலையில் மீட்பு - உசிலம்பட்டி: தாதம்பட்டி பாண்டி மனைவி தெய்வராணி 26. இரு மகள்கள் உள்ளனர்.கடந்த செப்.,9 மாயமானார். உத்தப்பநாயக்கனுார் போலீசார் தேடிய நிலையில் ஊருக்கு அருகில் உள்ள கிணற்றில் அழுகியநிலையில் மீட்கப்பட்டார். தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணங்களா என இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரித்து வருகிறார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X