| ஒருபுறம் தூர்வாரல்; மறுபுறம் சீர்கேடு! கரைப்புதூரில் விவசாயிகள் கவலை Dinamalar
ஒருபுறம் தூர்வாரல்; மறுபுறம் சீர்கேடு! கரைப்புதூரில் விவசாயிகள் கவலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
01:44

பல்லடம்:ஓடை வழித்தடம் ஒருபுறம் துார்வாரப்பட்டு வரும் நிலையில், மற்றொரு புறம், கழிவுகள் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவது, கரைப்புதுார் கிராம விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வருகிறது.


தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், பல்லடம் ஒன்றியம் கரைப்புதுார் கிராமத்திலுள்ள ஓடை துார்வாரப்பட்டு வருகிறது. ஒருபுறம் இப்பணி நடந்து கொண்டிருக்க, மறுபுறம் எதைபற்றியும் கவலை கொள்ளாமல், சிலர் ஓடையில் கழிவுகளை கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர். இச்செயல், விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வருகிறது.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், நீர் நிலைகள் துார்வாரப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. பருவமழைக்கு முன், நீர் நிலைகள் துார்வாரப்பட்டால், போதிய தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அவ்வகையில், கரைப்புதுார் ஓடை துார்வாரப்படுகிறது.இருந்தாலும், தனியார் நிறுவனத்தினர், அத்துமீறி ஓடையில் கழிவுகளை கொட்டி வருகின்றனர்.


தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலரின் முயற்சியால், பல லட்சம் ரூபாய் செலவு செய்து, துார்வாரும் பணி நடந்து வருகிறது. ஆனால், அதைபெற்றியெல்லாம் துளியும் கவலை கொள்ளாமல், கழிவுகள் கொட்டி, ஓடையை மாசுபடுத்தி வருகின்றனர்.அதனால், பலரின் முயற்சிகள் வீணாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, ஓடையை துார்வாரும் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் தனியார் நிறுவனங்களின் அத்துமீறல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X