குப்பைத் தொட்டிகள் அகற்றம் இப்ப என்ன செய்வீங்க!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2019
01:53

கோவை:கோவையில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தடுக்க, குப்பைத் தொட்டிகள் அகற்றப்படுகின்றன. மற்றொரு சபாஷ் முயற்சியாக, மாநகராட்சி சுகாதாரப்பிரிவு சார்பில், பொது இடங்களில் சாணம் மெழுகி, கோலம் வரைந்து, சுவாமி படம் வைத்து, மலர் துாவப்படுகிறது.


மக்கள் மத்தியில் மனமாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, இத்தகைய நுாதன முயற்சியை, மாநகராட்சி கையாள்கிறது.கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு, 850 டன் முதல், 1,000 டன் வரை குப்பை சேகரமாகிறது. அவை, தற்போது வெள்ளலுார் கிடங்கில் கொட்டப்படுகிறது. இதை தவிர்க்க, மக்கும் குப்பையை உருவாகும் இடத்திலேயே அழிக்க, மாநகராட்சி முயற்சிக்கிறது.இதற்காக, 'மைக்ரோ' அளவில், மக்கும் குப்பையில் இருந்து, இயற்கை உரம் தயாரிக்க மையம் கட்டப்படுகிறது. ஆனால், பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினர், தொட்டி இருந்தாலும் கூட, திறந்தவெளியில் ஆங்காங்கே குப்பையை வீசிச் செல்கின்றனர்.


தொட்டிகள் அகற்றம்மக்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட வேண்டும், தரம் பிரித்து குப்பை வழங்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்த, அதிகமாக குப்பை போடும் இடங்களில், தொட்டி அகற்றப்படுகிறது. அவ்விடத்தில் சாணம் மெழுகி, கோலமிட்டு, சுவாமி படம் வைத்து, மலர்கள் துாவப்படுகின்றன.


'இவ்விடத்தில் குப்பை கொட்டினால், அபராதம் வசூலிக்கப்படும்' என எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்படுகிறது. பின், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று குப்பை தரம் பிரித்து பெறப்படுகிறது. யாரேனும் வீதியில் கொட்டுவது தெரிந்தால், ரூ.500 முதல், ரூ.1,000 வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது.மக்கள் வரவேற்பு!மத்திய மண்டலம், 80வது வார்டு சுக்ரவாரப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து தொட்டிகளும், எடுக்கப்பட்டு விட்டன. இதே போல், 83வது வார்டு, வைசியாள் வீதி மற்றும் தெலுங்கு வீதியில், நேற்று சாணம் மெழுகி கோலமிடப்பட்டது. மாநகராட்சியின் இம்முயற்சிக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


சுகாதாரப் பிரிவினர் கூறுகையில், 'ஒவ்வொரு வார்டிலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். குப்பை இல்லா வார்டு உருவாக வேண்டுமெனில், தொட்டி இருக்கக்கூடாது. அதனால், படிப்படியாக தொட்டிகளை அகற்றி வருகிறோம். ஒவ்வொரு வீடாகச் சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.


குப்பையை தரம் பிரிக்கவும் கற்றுக்கொடுக்கிறோம். மக்கும் குப்பை உரம் தயாரிக்கும் மையத்துக்குச் செல்கிறது. மக்காத குப்பையை மறு சுழற்சிக்கு, தனியார் நிறுவனத்துக்கு துப்புரவு தொழிலாளர்கள் வழங்கி விடுவர். அனைத்து வார்டுகளிலும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, குப்பையில்லா நகரமாக கோவை மாறும்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-செப்-201903:16:00 IST Report Abuse
ருத்ரா கோலம் சரி. தெய்வப் படங்கள் நடுவீதியில் நெருடலாக உள்ளது. சுத்தம் பற்றிய விழிப்புணர்வு தானாக மக்களிடம் தோன்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
18-செப்-201909:05:20 IST Report Abuse
ஆப்பு இப்படித்தான் பெங்களூரில் வெளிப்புறச் சுவர்களில் சுவாமி படம் வைத்த டைல்கள் பதிக்கப்பட்டன. பிறமதத்தினர்கள் அதை மதிப்பதே இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X