| சாலையில், 'பிளக்ஸ்' பேனர் Dinamalar
சாலையில், 'பிளக்ஸ்' பேனர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
02:00

திருவள்ளூர்:சாலையின் இருபக்கங்களிலும், 'பிளக்ஸ்' பேனர் வைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து, திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவினை அமல்படுத்தும் வகையில், பிப்.21ம் தேதி, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், அச்சக உரிமையாளர்கள், அரசியல் கட்சியினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.இக்கூட்டத்தில், சாலை, நடைமேடை, பாதசாரிகள் செல்லும் வழிகள் மற்றும் முக்கிய சாலைகளின் இரு பக்கங்களிலும், 'பிளக்ஸ்' பேனர்கள் மற்றும் வாசகங்கள் அடங்கிய அட்டைகள் அமைக்கக் கூடாது என, அறிவுரை வழங்கப்பட்டது.ஆனால், சில இடங்களில், 'பிளக்ஸ்' பேனர்கள் அமைக்கப்படுவது தொடர்கிறது. இது, சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவை மீறி, நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உட்பட்ட செயலாகும்.இனியும், இச்செயல் தொடராமல் இருக்கும் வகையில், 'பிளக்ஸ்' பேனர் நிறுவுவோர் மீதும், அச்சக உரிமையாளர்கள் மீதும், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X