| மாணவர் தற்கொலை  Dinamalar
மாணவர் தற்கொலை 
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
02:03

வெள்ளவேடு,:தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி தாலுகாவைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் சசிகுமார், 18.இவர், 11 ஆண்டுகளாக, வெள்ளவேடு அடுத்த, உட்கோட்டை கிராமத்தில், தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தங்கும் விடுதியில் தங்கி, அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.


பள்ளி படிப்புக்குப்பின், கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்லுாரியில் மெக்கானிக்கல் படிப்பு படித்து வருகிறார்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன், கல்லுாரியிலிருந்து, சசிகுமார் வருகைப் பதிவேடு குறைந்துள்ளதாகவும், கல்லுாரிக்கு சரியாக வருவதில்லை எனவும், கடிதம் வந்துள்ளது.இதை விடுதியின் செயலர், விசாரணை செய்துள்ளார். இதனால், மிகுந்த மன வேதனை அடைந்த சசிகுமார், தன்னுடைய அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில், நேற்று முன்தினம், விடுதியின் துப்புரவு பணியாளர் அறையை சுத்தம் செய்ய சென்ற போது, சசிகுமார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.வெள்ளவேடு போலீசார் உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X