| வழிப்பறிகளை தடுக்க வேண்டும்: தொழிலாளர்கள் கோரிக்கை Dinamalar
வழிப்பறிகளை தடுக்க வேண்டும்: தொழிலாளர்கள் கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
02:05

கும்மிடிப்பூண்டி:'கும்மிடிப்பூண்டி, தொழிற்சாலை வளாகத்திற்குள் நடைபெறும் வழிப்பறிகளை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தொழிற்சாலை நிர்வாகத்தினர் பங்கேற்ற கூட்டத்தில், கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., அரவிந்தன் தலைமையில், தொழிற்சாலை பாதுகாப்பு குறித்து, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட, தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கான சிறப்பு கூட்டம், நேற்று நடைபெற்றது.கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற கூட்டத்தில், தொழிற்சாலைகள் சார்பில், 70 பேர் பங்கேற்றனர்.எஸ்.பி., அரவிந்தன் பேசியதாவது:தொழிற்சாலை வளாகத்தின், உட்புறம் மற்றும் வெளிபுறத்தில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இருசக்கர வாகனத்தில் வரும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள், கண்டிப்பாக, 'ஹெல்மெட்' அணிய வேண்டும்.தொழிலாளர்கள் ஆதார் அட்டை உள்ளிட்ட விபரங்களை, கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும்.தொழிலாளர்கள் விபரங்களை, அந்தந்த போலீஸ் நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். போலீசாருக்கும், தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும் இடையே, நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வகையில், 'வாட்ஸ் ஆப் குரூப்' ஏற்படுத்தப்படும்.இவ்வாறு, எஸ்.பி., தெரிவித்தார். அதை தொடர்ந்து, தொழிற்சாலை நிர்வாகத்தினர் சார்பில், சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.குறிப்பாக, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், இரவு நேரத்தில், வேலைக்கு வந்து செல்லும், தொழிலாளர்களிடம், சில மர்ம நபர்கள், பணம் மற்றும் மொபைல்போன்களை வழிப்பறி செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது.கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தை சுற்றி, தொழிலாளர்களை குறி வைத்து இயங்கும் டாஸ்மாக் கடைகளால், பல சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன.டாஸ்மாக் கடைகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்திப்பட்டு பகுதியில், போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை, தொழிற்சாலை நிர்வாகத்தினர் முன்வைத்து பேசினர்.உரிய நடவடிக்கை எடுப்பதாக, எஸ்.பி., உறுதி அளித்தார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X