கம்மாபுரம் : கம்மாபுரம் ஒன்றிய ஊராட்சிகளில், காய்ச்சல் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
பருவமழை துவங்கியதால், கம்மாபுரம் கிராம ஊராட்சி பி.டி.ஓ., தண்டபாணி உத்தரவின் பேரில், 53 ஊராட்சிகளில், காய்ச்சல் தடுப்பு கண்காணிப்பு பணி மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணி, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளைசுத்தம் செய்து குளோரினேஷன் செய்யும் பணிநடக்கிறது.மேலும், வீடுகளிலுள்ள டயர், பிளாஸ்டிக் கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கும் பணி நடக்கிறது. அப்பணியை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர்புலிகேசி, திருச்சி மண்டல இளநிலை பூச்சி வல்லுனர் பாண்டியன் ஆகியோர் நேற்று கம்மாபுரம், கார்கூடல், தெற்கு சேப்ளாநத்தம் ஊராட்சிகளில் ஆய்வு செய்தனர்.சுகாதார ஆய்வாளர்கள் முருகவேல், கார்த்திகேயன், ஊராட்சி செயலர்கள் ரவிச்சந்திரன், ரமேஷ், களப்பணியாளர்கள்உடனிருந்தனர்.