பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில், சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.ஒன்றிய அவைத் தலைவர் ராசாங்கம், நகர செயலர்கள் செந்தில்குமார், மாரிமுத்து, விஜயன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலர் அசோகன் வரவேற்றார். பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசுகையில், 'தமிழகத்தில், நல்லாட்சி நடந்து வருகிறது. அதை பொறுத்துக்கொள்ள முடியாமல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கிண்டல் செய்கிறார். தினகரன் கட்சிக்கு சென்றவர்கள் தற்போது அ.தி.மு.க., விற்கு திரும்பி வருகின்றனர். பரங்கிப்பேட்டையில் இருந்து கடல்நீர் வெள்ளாற்றிற்குள் செல்லாத வகையில், தடுப்பு அணை கட்ட டெண்டர் விடுவதற்கான, ஏற்பாடுகள் நடந்து வருகிறது' என்றார்.கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், தலைமை கழக பேச்சாளர் முத்து, அவைத் தலைவர் குமார், மாவட்ட துணை செயலர் தேன்மொழி காத்தவராயசாமி, மாவட்ட மீனவரணி செயலர் வீராசாமி, பாசறை செயலர் சண்முகம், முன்னாள் துணை சேர்மன் திருமாறன், முன்னாள் ஆவின் தலைவர் சுரேஷ்பாபு, பாஸ்கர், கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஹாஜா நஜிமுதீன், கணேஷ், ஆறுமுகம் பங்கேற்றனர்.துணை செயலர் ரங்கம்மாள் நன்றி கூறினார்.