மதுபானங்கள் பறிமுதல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2019
02:10

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், 'டாஸ்மாக்' கடை அருகில், அனுமதியற்ற, 'குடி'மையம் இயங்கி வருகிறது. இந்த, 'குடி' மையத்தை, டாஸ்மாக் துணை கலெக்டர் தலைமையில் அதிகாரிகள், சோதனை நடத்தி, 'சீல்' வைத்தனர்.இருப்பினும், அங்கு, மது விற்பனை நடப்பதாக, திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தனுக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு, 'குடி' மையத்தில் சோதனையிட்டனர்.அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, பீர் பாட்டில்கள் மற்றும் மது பாட்டில்கள், என, மொத்தம், 350 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக, அவற்றை விற்பனை செய்த, பிரபு, ராஜா இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


பெரியகுப்பம்: பெரியகுப்பம், டாஸ்மாக் மதுபான கடை அருகில் செயல்பட்டு வரும், 'குடி'மையத்தில், டவுன் போலீசார், நேற்று சோதனை நடத்தி, 20 பீர், 125 மதுபானங்களை, பறிமுதல் செய்தனர்.விற்பனையாளர், திருநெல்வேலியைச் சேர்ந்த சுடலைமணி, 35, என்பவரை கைது செய்தனர்.


பஸ் மோதி முதியவர் பலி


ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அடுத்த, ஆரணி, தமிழ் காலனியில் வசித்து வந்தவர், சம்பந்தம், 68. சாலையில், நடந்து சென்றபோது, பின் வந்த தனியார் பஸ் மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆரணி போலீசார் பிணத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


லாரி மோதி முதியவர் பலி


செங்கல்பட்டு: சிங்கபெருமாள்கோவில் அடுத்த, திருக்கச்சூர் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் வேதாசலம், 65. இவர், நேற்று முன்தினம், சிங்கபெருமாள்கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையை கடந்தார். அப்போது, சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்ற லாரி, முதியவர் மீது மோதியது.இதில், படுகாயமடைந்த அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று, இறந்தார். மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


வெடி விபத்து: ஒருவர் கைது


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, காரை கிராமத்தில், கடந்த, 11ம் தேதி, அம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழா வாண வேடிக்கைக்காக, கூடுவாஞ்சேரி பகுதியில் இருந்து, வெடிகள் வரவழைக்கப்பட்டன.அன்று அதிகாலையில், வேனில் வைத்திருந்த வெடிகள் திடீரென வெடித்தன. இந்த விபத்தில், அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் காமேஷ், 15, பலத்த காயமடைந்து, இறந்தார்.இந்நிலையில், அதிக சக்தி வாய்ந்த வெடிகளை வெடிக்க எடுத்து வந்த குற்றத்திற்காக, கூடுவாஞ்சேரியை சேர்ந்த வினோத், 30, என்பவரை, போலீசார் கைது செய்தனர். வெடி உரிமையாளர் கோவிந்தசாமியை தேடுகின்றனர்.


வாலிபர் பலி


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர், ராஜசேகர், 28. சிறுகாவேரிபாக்கத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு, இரு சக்கர வாகனத்தில், 14ம் தேதி சென்றார். திடீரென சாலையின் குறுக்கே மாடு வந்ததால், நிலை தடுமாறிய அவர், வாகனத்துடன் விழுந்தார்.பலத்த காயமடைந்த அவரை, அவ்வழியாக சென்றோர் மீட்டு, '108' ஆம்புலன்சில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.தீவிர சிகிச்சைக்காக, சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று, ராஜசேகர் இறந்தார்.


வேன் பறிமுதல்


ஊத்துக்கோட்டை: வெங்கல் அடுத்த, சிட்டாத்துார் ஏரியில், மணல் கடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.வெங்கல் போலீசார், அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த பொலீரோ வேனை போலீசார் மடக்கினர்.போலீசாரைக் கண்டதும், ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். வேனை சோதனை செய்ததில், அதில், மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இது குறித்து, போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X