அத்துமீறலை அனுமதியோம்! பாசன நீர் திருட்டு தடுக்க கண்காணிப்பு குழு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2019
02:17

பொள்ளாச்சி:'பாசனத்துக்கு வழங்கப்படும் தண்ணீரை திருட முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.பரம்பிக்குளத்தில் இருந்து சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்துக்கு நீர் எடுத்து, மின் உற்பத்தி செய்த பின், காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது.


நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் வினியோகிக்கும் வகையில், அணையில் இருப்பு வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, தண்ணீர் திறப்பு குறித்து நேற்றுமுன்தினம் திருமூர்த்தி நீர் தேக்க திட்டக்குழுவினர் மற்றும் அதிகாரிகள் ஆலோசித்து முடிவு செய்தனர். வரும், 26ம் தேதி தண்ணீர் திறக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.அப்போது, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனிடம் திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழுவினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழுவினர் கூறியதாவது:காண்டூர் கால்வாயில் விடுபட்டுள்ள பணிகளை முடிக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துாணக்கடவில் இருந்து சர்க்கார்பதி வரை உள்ள கால்வாய் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. அந்த கால்வாய் முழுமையாக சீரமைக்க உரிய நிதியை அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும்.பரம்பிக்குளம் பிரதான கால்வாய் பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ளன.


கால்வாய் சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால், கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.காண்டூர் கால்வாய் சீரமைத்தது போன்று, கான்கிரீட் அமைத்து பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சீரமைக்க வேண்டும்.நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் வினியோகம் துவங்கப்பட உள்ள நிலையில், கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். குழுக்கள் மூலம் தண்ணீர் திருட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். இந்த குழுவில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும்.கேரளா மாநில முதல்வருடன், தமிழக முதல்வர் சந்தித்து ஆனைமலையாறு, நல்லாறு அணைத்திட்டம் குறித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது, விவசாய பிரதிநிதிகளை அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது தான், எங்களின் கோரிக்கைகளை எடுத்துரைக்க முடியும்.இவ்வாறு, தெரிவித்தனர்.கோரிக்கைகள் மீது நடவடிக்கை!துணை சபாநாயகர் கூறுகையில், ''தண்ணீர் திருட்டை கட்டுப்படுத்த அதிகாரிகள் அடங்கிய குழு மூலம் கண்காணிப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். விவசாயிகளின் கோரிக்கைகளை தொகுத்து மனுவாக கொடுத்தால் முதல்வரிடம் தெரிவித்து, அனைத்து கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


கோரிக்கைகள் மீது நடவடிக்கை!துணை சபாநாயகர் கூறுகையில், ''தண்ணீர் திருட்டை கட்டுப்படுத்த அதிகாரிகள் அடங்கிய குழு மூலம் கண்காணிப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். விவசாயிகளின் கோரிக்கைகளை தொகுத்து மனுவாக கொடுத்தால் முதல்வரிடம் தெரிவித்து, அனைத்து கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X