தொலைநோக்கியில் சூரிய கிரகணம் காணலாம்! மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2019
02:17

பொள்ளாச்சி:தேசிய அறிவியல் கழகம், நேரு கோளரங்கம், நேரு ஆராய்ச்சி மற்றும் அறிவியல் அருங்காட்சியகம் சார்பில், சூரிய கிரகணத்தை பார்க்கும் விதம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி நாச்சியார் பள்ளியில் நடந்தது.பள்ளி தலைவர் மணி, தாளாளர் விஜயலட்சுமி, முதல்வர் சகுந்தலாமணி முன்னிலை வகித்தனர். நேரு நினைவு ஆராய்ச்சி மற்றும் அறிவியல் அருங்காட்சியகம், நேரு கோளரங்கம் இயக்குனர் ரத்னாஸ்ரீ மாணவர்களுக்கு சூரிய கிரகணத்தை ஒளிவிலகல் தொலைநோக்கி மூலம் காண்பது, அளவீடு செய்வது குறித்து விளக்கினார். ஆர்வமாக மாணவர்கள், சூரியனை கருவி மூலம் பார்த்து மகிழ்ந்தனர்.நேரு கோளரங்கம் இயக்குனர் கூறியதாவது:வரும் டிச., 26ம் தேதி சூரிய கிரகணம் இந்தியா முழுவதும் தெரிகிறது. கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில், தீப்பந்தம் போல சூரிய கிரகணம் தெரிய உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் இந்த நிகழ்வு முழுமையாக தெரியும். சூரிய கிரகணம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் குறித்து விளக்கும் வகையில், தேசிய அறிவியல் கழகம், நேரு ஆராய்ச்சி மற்றும் அறிவியல் கழகம், நேரு கோளரங்கம் சார்பில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த பணிமனை நடத்துகின்றனர்.நாச்சியார் பள்ளியில், சுற்றியுள்ள பள்ளிகளை ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. அதில், சூரிய கிரகணத்தை நேரிடையாக பார்க்க கூடாது. ஒளி விலகல் தொலைநோக்கி மூலம் பார்க்கும் போது, சூரியனின் பிரதிபலிப்பை பார்க்க முடியும் என விளக்கப்பட்டது. இதனை மாணவர்கள் பார்வையிட்டு, அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அளவீடு செய்வது குறித்தும் விளக்கப்பட்டது. டிச., 18ம் தேதி மரங்களின் கீழ் சூரியனின் பிரதிபலிப்பு தெரிவதை நோட்டமிட வேண்டும். பின், மரங்களின் கீழ், 26ம் தேதி சூரிய கிரகணம் பிரதிபலிப்பை பார்க்கலாம். தொடர்ந்து, உடுமலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று பணிமனை நடத்தப்படுகிறது. இவ்வாறு, தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X