கலெக்டர் போட்டாரு உத்தரவு பள்ளி முன் போட்டாச்சு தடுப்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2019
02:18

ஆனைமலை:ஆனைமலை அரசு மேல்நிலை பள்ளி முன், கலெக்டரின் உத்தரவின் பேரில் வேகத்தடை அமைக்கப்பட்டதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆனைமலை பகுதிகளில் கடந்த, 6ம் தேதி மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆய்வு செய்தார். அப்போது, ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள், 'பள்ளி அருகே இறைச்சிக்கழிவுகள் கிடக்கிறது, பள்ளி வளாகத்தில் புதர் முளைத்து உள்ளது, பள்ளி முன் வேகத்தடை அமைக்க வேண்டும்,' என, பல கோரிக்கைகளை முன் வைத்து மனு கொடுத்தனர்.கலெக்டர் பள்ளியில் உடனடியாக ஆய்வு செய்தார். பிரச்னைகளை சரிசெய்யாமல் இருந்த அதிகாரிகளுக்கு 'டோஸ்' விட்டு, மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட்டார்.இதையடுத்து, பள்ளி சுற்றுச்சுவர் அருகே இருந்த இறைச்சிக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை ஆனைமலை பேரூராட்சியினர் சுத்தம் செய்தனர்.நேற்று, நெடுஞ்சாலைத்துறையினர் பள்ளி அருகே, ஆனைமலை - பொள்ளாச்சி ரோட்டில், வேகத்தடை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், பள்ளி வளாகம் இருப்பதை உணர்த்தும் அறிவிப்பு பலகையும் அமைக்கப்பட்டது.விபத்துக்களை தடுத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, வேகத்தடை அமைக்கப்பட்டதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அரசு மேல்நிலை பள்ளி வளாகத்திலுள்ள புதர்களையும் சுத்தம் செய்ய வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை மட்டும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X