காட்டுமன்னார்கோவில் பணிமனையில் வசதிகள்... இல்லை! 5 பஸ்கள் நிறுத்தம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2019
02:22

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் புதிய பணிமனை அமைத்தும் பல்வேறு கிராமங்களுக்கு சென்று வந்த பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை வசதிகள் இன்றி ஊழியர்கள் அல்லாடி வருகின்றனர்.



கடலுார் மாவட்டத்தின் கடைகோடி நகரமான காட்டுமன்னார்கோவில், அதிக அளவு கிராமங்களை உள்ளடக்கியது. கடலுார் - நாகை மாவட்டத்தை இணைக்கும் கொள்ளிடம் ஆற்றில், முட்டத்தில் பாலம் கட்டப்பட்ட பின், இப்பகுதியில் போக்குவரத்து அதிகரித்தது. காட்டுமன்னார்கோவிலில் புதிய பணிமனை அமைக்க பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்தனர்.



தொகுதி எம்.எல்.ஏ., முருகுமாறன் கோரிக்கையின் பேரில், முன்னாள் முதல்வர் ஜெ., பணிமனை அமைக்க உத்தரவிட்டார். இதற்கு காட்டுமன்னார்கோவில் அடுத்த குப்பங்குழியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் இருந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு இருந்த பழைய கட்டடம் ரூ.25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, 2015 ம் ஆண்டு புதிய பணிமனை அமைக்கப்பட்டது. 150 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிகின்றனர்.



புதிய பணிமனை அமைத்து 4 ஆண்டுகள் ஆகியும், அடிப்படை வசதிகள் இன்றி, ஊழியர்கள் திண்டாடி வருகின்றனர். வேலைக்கு வரும் ஊழியர்கள் உள்ளே செல்வதே பெரும் சவாலான விஷயமாக உள்ளது. பணிமனையை சுற்றியுள்ள பகுதி முழுவதும் மழை நீர் தேங்கும் குளங்களாக காட்சி அளிக்கிறது. மேலும் வளாகத்தை சுற்றி புதர் மண்டி, பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இரவு நேர பணியாளர்கள், இங்கு தங்குவதற்கு அச்சம் அடைகின்றனர்.



ஊழியர்களுக்கு ஓய்வு அறையும் இல்லை. புதிய பணிமனை அமைக்கப்பட்டதால், காட்டுமன்னார்கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் தடையின்றி பஸ் போக்குவரத்து இருக்கும் என எதிர்பார்த்த பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லுாரி மாணவர்கள், ஒரு கட்டத்தில், பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். சிதம்பரம் பணிமனை நிர்வாகத்தின் கீழ் இருந்தபோது சென்ற பல்வேறு கிராம பஸ்கள், நிர்வாக சீர்கேடு காரணமாக, காட்டுமன்னார்கோவிலில் புதிய பணிமனை வந்த பின்பு நிறுத்தப்பட்டுள்ளது.



எய்யலுார் வரை சென்ற தடம் எண் 44, கஞ்சங்கொல்லை வரை சென்ற தடம் எண் 41, தில்லைநாகபுரம் வரை சென்ற தடம் எண் 45, சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் வழியாக அழிஞ்சிமங்கலம் வரை சென்ற தடம் எண் 2 பி, உள்ளிட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், காட்டுமன்னார்கோவிலில் எள்ளேரி வழியாக சிதம்பரம் வரை செல்லும் தடம் எண்- 2 ஏ நிறுத்தப்பட்டது. அப்பகுதி மக்கள் அழுத்தம் கொடுத்த பின், கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் இயக்கப்படுகிறது.



கிராம பகுதி மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சியை கருதியே கிராம புறங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிராம பஸ் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னைக்கு பஸ் இயக்க காட்டும் ஆர்வத்தை கிராம பகுதிகளுக்கு இயக்குவதிலும் அதிகாரிகள் காட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



எம்.எல்.ஏ., விளக்கம்:


பணிமனையின் அவல நிலை குறித்து, முருகுமாறன் எம்.எல்.ஏ., விடம் கேட்ட போது,'பணிமனைக்காக ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து பழைய பில்டிங் ரிப்பேர் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் துவங்கப்பட்டது. மழையால் சுற்றியுள்ள சாலைகள் வீணாகியுள்ளது. அங்கு வடிகால் இல்லை. சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளேன். புதிய வழித்தடமாக காட்டுமன்னார்கோவிலில் இருந்து, வேளாங்கண்ணி, கும்பகோணத்திற்கு பஸ் இயக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். காட்டுமன்னார்கோவிலில் இருந்து முட்டம் வழியாக மயிலாடுதுறைக்கு டவுன் பஸ் இயக்க உள்ளோம்' என்றார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X