இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2019
03:52

புதுச்சேரி : புதுச்சேரி காங்., செயற்குழு கூட்டம், சன்வே ஓட்டலில் நேற்று நடந்தது.கட்சி தலைவரான அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.




முதல்வர் நாராயணசாமி, மாநில மேலிட பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் முன்னிலை வகித்தனர்.அகில இந்திய காங்., செயலர் சஞ்சய்தத், அமைச்சர் ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் விஜயவேணி, தீப்பாய்ந்தான் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நாராயணசாமி பேசுகையில்; டில்லியில் நடந்த காங்., கூட்டத்தில் ராஜிவ் வைரவிழா, காந்தி 150 வது பிறந்த நாள் விழாவை எல்லா மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடவும், கவிதை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தவும், பாதயாத்திரை செல்ல அறிவுறுத்தப்பட்டது.




அதன்படி, புதுச்சேரியில், வரும் அக். 2ம் தேதி முதல் நடத்த உள்ளோம்.காங்., கட்சியில். புதிய உறுப்பினர்களை சேர்க்க சோனியா உத்தரவிட்டுள்ளார். ஏற்னவே உள்ள உறுப்பினர்கள் தங்களின் உறுப்பினர் அடையாள அட்டையை புதுப்பித்து கொள்ள வேண்டும். புதிய உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும்.காங்., கட்சிக்கு வரும் இளைஞர்கள், வந்த உடனே எம்.எல்.ஏ., எம்.பி. பதவி கிடைக்கும் என நினைக்கின்றனர். காங்., கட்சியில் உழைப்பவர்களுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். பல மாநிலங்களில் காங்., கட்சி தோல்வி அடைந்தாலும், சில மாநிலங்களில் வெற்றி பெற்றாலும், எல்லா மாநிலங்களிலும் காங்., கட்சியால் நிலைத்து நிற்க முடிகிறது.பிரதமர் மோடி தலைமையிலான அரசில், பொருளாதார வீழ்ச்சி பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது.




ஆட்டோமொபைல் தொழில் மூடப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ. 1 லட்சத்து, 75 ஆயிரம் கோடியை எடுத்து பண புழக்கத்தில் விடுகிறார்.கடந்த 2008 ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியின்போது, பிரதமராக இருந்த மன்மோகன்சிங் எல்லாவற்றையும் சமாளித்தார். இந்தியா வளர்ச்சி அடைந்தது.இந்தி திணிப்பை கொண்டு வருகின்றனர். இதனை எதிர்த்து, அக்டோபர் 15 முதல் 25ம் தேதிக்குள் புதுச்சேரியில் போராட்டம் நடத்தப்படும்.


நகர மற்றும் கிராமப்புற காங்., கட்சி உறுப்பினர்களை ஒன்றினைத்து, பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X