கூண்டோடு மாற்றம்! போலீசில் பட்டியல் தயாரிப்பு மும்முரம்... 'தனிக்காட்டு' ராஜாக்களுக்கு வந்தது சிக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2019
00:51

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பல ஆண்டுகளாக ஒரே ஸ்டேஷனில் பணியாற்றிவரும் போலீசாரின் பட்டியல் தயாராகி வருகிறது.


திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம் மற்றும் உடுமலை என, ஐந்து சப்-டிவிஷன்கள் உள்ளடக்கியது.சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட ஒவ்வொரு ஸ்டேஷனிலும், 20ல் இருந்து, 30 வரை என போலீஸ் பற்றாக்குறை இருந்து வருகிறது. ஸ்டேஷனில் இருக்கும், சில போலீசாரும் மருத்துவமனை, 'கோர்ட்' சார்ந்த ஏதாவது ஒரு பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால், ரோந்து பணி கடுமையாக பாதிக்கிறது. ஸ்டேஷன் பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. ஐந்து பேர் பார்க்க கூடிய வேலைகளை, இரு போலீசார் பார்க்கும் நிலை உள்ளது.


சட்டம்--ஒழுங்கு, குற்றத்தடுப்புகளில் ஈடுபடுதல்; போக்குவரத்தில், 'ஒன்வே', 'நோ பார்க்கிங்' உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் அதிகம் நடந்து வருவதை தடுக்க முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறி வருகின்றனர்.போலீஸ் பற்றாக்குறையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி போலீசார் சிலர், வேலை செய்கிறேன் என்ற போர்வையில் மற்றும் மேல் அதிகாரிகளின் தயவில் வேறு ஸ்டேஷன்களுக்கு மாற்றப்படாமல் ஒரே ஸ்டேஷனில் 'தனி ராஜ்ஜியம்' நடத்தி வருகின்றனர்.


இதனால், ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் தங்களுக்கு ஏதாவது ஆதாயம் தேடி கொள்வது நடக்கிறது. சிலர் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகத்துக்கு தெரியாமல் லாட்டரி, சீட்டாட்டம், மதுக்கடை என, பல்வேறு சட்ட விரோத செயல்கள் மூலம் பெறப்படும் கமிஷன் மூலம், பண மழையில் நனைகின்றனர்.இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள ஸ்டேஷன்களில் பணியாற்றி வரும் போலீசாரின் விவரம்; மூன்றாண்டுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் புகார்களில் சிக்கியவர்கள் என, தனித்தனியாக பட்டியல் தயாரிக்குமாறு எஸ்.பி., திஷா மிட்டல் அறிவுறுத்தியுள்ளார்.


குற்றப்பிரிவு, மதுவிலக்கு, போக்குவரத்து மற்றும் எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் என, தனித்தனி பட்டியல் மும்முரமாக தயாராகி வருகிறது.முதல் கட்டமாக, சட்டம்-ஒழுங்கு போலீசாரின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.எஸ்.பி.,யிடம் கேட்ட போது, ''மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் போலீசாரின் விபரம் ஸ்டேஷன் வாரியாக எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இடமாற்றம் செய்யப்படுவார்கள்,'' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
19-செப்-201913:19:28 IST Report Abuse
Jayvee அதுபோல் தலைமை செயலகம் மற்றும் நகராட்சி மாநகராட்சி மற்றும் CMDA வில் பணி புரியும் ஊழியர்களையும் மாற்றவேண்டும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X