| பந்தலில் பீர்க்கங்காய் சாகுபடி: மழையால் விளைச்சல் பாதிப்பு Dinamalar
பந்தலில் பீர்க்கங்காய் சாகுபடி: மழையால் விளைச்சல் பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 செப்
2019
23:15

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள குளத்துப்பாளையத்தில் பீர்க்கங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.குளத்துப்பாளையம் விவசாயி சக்திவேல் ஒரு ஏக்கர் நிலத்தில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உழவு செய்து, நான்கு லட்சம் ரூபாய் செவில் பந்தல் அமைத்துள்ளார். அதன்பின், பீர்க்கங்காய் சாகுபடி செய்துள்ளார்.இதில், மூன்று அடி இடைவெளியில், குழி எடுத்து தொழுஉரமிட்டு விதைத்துள்ளார்.


சொட்டு நீர் பாசனமும் அமைக்கப்பட்டுள்ளதால், தினமும் தண்ணீர் விடப்படுகிறது.மூன்று மாதத்தில், பீர்க்கங்காய் செடிகள் பந்தலில் நன்றாக படர்ந்து, காய்ப்புக்கு வந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்ததால், பூச்சி தாக்குதல் ஏற்பட்டு, இலைகள் சுருங்கியும், ஊட்டமின்றி காணப்படுகிறது.இதனால், ஒரு நாள் விட்டு ஒரு நாள், 600 கிலோ பீர்க்கங்காய் மட்டுமே கிடைக்கிறது. வியாபாரிகள் தோட்டத்திற்கு நேரடியாக வந்து, கிலோ ஒன்றுக்கு, 25 ரூபாய் விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர்.மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருந்தால், ஒன்பது டன் வரை பீர்க்கங்காய் மகசூல் கிடைத்திருக்கும்.மழையால் நோய் தாக்கி, இரண்டு டன் பீர்க்கங்காய் விளைச்சல் பாதித்துள்ளது, என, விவசாயி தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X