| பாறையை உடைத்து கற்கள் கடத்தல்: ஆனைகட்டியில் டிராக்டர் பறிமுதல் Dinamalar
பாறையை உடைத்து கற்கள் கடத்தல்: ஆனைகட்டியில் டிராக்டர் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 செப்
2019
00:09

பெ.நா.பாளையம்:ஆனைகட்டி மலையில் உள்ள பாறைகளை உடைத்து, கற்களை கடத்த பயன்படுத்திய டிராக்டரை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.ஆனைகட்டி பகுதி மலையிட பாதுகாப்புக்கு உட்பட்டது. இங்கு, இயற்கை வளங்களை அழிப்பது கடுமையான குற்றம். இங்குள்ள பனப்பள்ளி அரசு புறம்போக்கு நிலத்தில், பாறைகள் வெட்டி எடுப்பதாக, வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.


வீரபாண்டி வி.ஏ.ஓ., ராமநாதன் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதில், அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார், 32, புறம்போக்கு நிலத்தில் உள்ள பாறைகளை வெட்டி, சைஸ் கற்களாக மாற்றி, டிராக்டரில் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.வி.ஏ.ஓ., ராமநாதன் கூறுகையில், ''விசாரணையில், வேளாண் துறையைச் சேர்ந்த சிலர், தடுப்பணை கட்ட சைஸ் கற்களை வெட்டி எடுத்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருந்தாலும், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு, கோவை வடக்கு தாசில்தார் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.அனுமதி இல்லாமல் கற்களை வெட்டி, கடத்த முயன்றவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X