| சென்னை பெண்ணை தாக்கி நகை பறிப்பு பிரபல ரவுடி கைது: கூட்டாளிக்கு வலை Dinamalar
சென்னை பெண்ணை தாக்கி நகை பறிப்பு பிரபல ரவுடி கைது: கூட்டாளிக்கு வலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 செப்
2019
00:43

புதுச்சேரி:புதுச்சேரி பியூட்டி பார்லரில், டாட்டூ போடவந்த சென்னை பெண்ணை தாக்கி, நகை பறித்த பிரபல ரவுடி டிராக் சிவாவை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.


சென்னை, தாம்பரத்தை சேர்ந்தவர் ஆனந்த் மனைவி தபசும் சல்மா,30. புதுச்சேரியில் தங்கியிருந்த இவர், கணவர் மற்றும் நண்பர்களுடன், கடந்த 15ம் தேதி இரவு 8:00 மணியளவில், மூலகுளத்தில் உள்ள பியூட்டி பார்லரில் 'டாட்டூ' போட சென்றார்.அப்போது அங்கு வந்த, முத்தியால்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி டிராக் சிவா, 32; நேதாஜி நகரை சேர்ந்த ஜிம் விக்கி ஆகிய இருவரும், தபசும் சல்மாவை கிண்டல் செய்ததாக தெரிகிறது.இதை, கணவர் ஆனந்த் மற்றும் நண்பர்கள் தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டது. தபசும் சல்மா, ஆனந்த், நண்பர்கள் தினேஷ், திவ்யா ஆகியோரை, டிராக் ரவியும் அவரது கூட்டாளியும் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், தபசும் சல்மாவின் செயின், மோதிரத்தை பறித்துச் சென்றனர்.இதுகுறித்த புகாரின்பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்தனர். சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., அகன்ஷா யாதாவ் உத்தரவின்பேரில், எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் மேற்பார்வையில், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.சம்பவம் நடந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ரவுடி டிராக் சிவா, கூட்டாளி ஜிம் விக்கி இச்சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது. அதையடுத்து, டிராக் சிவாவையை போலீசார் நேற்று காலை கைது செய்து, நகைகளை மீட்டனர். தலைமறைவாக உள்ள ஜிம் விக்கியை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X