| பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் ஸ்டிரைக் Dinamalar
பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் ஸ்டிரைக்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 செப்
2019
00:49

புதுச்சேரி:'பி.ஆர்.டி.சி., ஊழியர் கள் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்' என, அ.தி.மு.க., சட்டசபை தலைவர் அன்பழகன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியது:புதுச்சேரியில் திறந்தவெளி விளம்பர தடை சட்டம், 10 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. ஆனால், இச்சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை.எந்தெந்த இடத்தில் பேனர் வைக்கலாம் என அதிகாரிகளே முடிவு செய்கின்றனர். இந்த விஷயத்தில் கவர்னர் கிரண்பேடி தலையீடு அவசியமாகிறது. அவர், பேனர் தடைச்சட்டத்தில் தலையிட்டு, சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அச்சிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறி வருகின்றனர்.அரசு மருத்துவமனையில் நிறைய பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதில்லை. காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.அரசு நிறுவனங்களில் வேலையில்லாமல் உள்ள நபர்களை கொண்டு அந்தப்பணியிடங்களை நிரப்பலாம். பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் போராட்டத்தால் பஸ்கள் இயக்கப்படாமல் 3ம் நாளாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இப்போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். பி.ஆர்.டி.சி., போன்ற அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவது குறித்து ஆய்வு செய்து, முறை கேடு, ஊழல்களை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X