| புதுச்சேரியில் லாரிகள் 'ஸ்டிரைக்' Dinamalar
புதுச்சேரியில் லாரிகள் 'ஸ்டிரைக்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 செப்
2019
01:03

புதுச்சேரி:மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரியில் நேற்று லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால், 1,000 லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.


மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில், சாலை போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும், அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்., சார்பில், நேற்று காலை 6:00 மணி முதல் மாலை 6:00 வரை, வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டது.இப்போராட்டத்திற்கு, புதுச்சேரி மாநில லாரி உரிமையாளர் சங்கம் ஆதரவு தெரிவித்தது. அதன்படி, புதுச்சேரியில் லாரிகள் நேற்று ஓடவில்லை. தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சரக்குகள் ஏற்ற லாரிகள் செல்லவில்லை.பெரிய மார்க்கெட் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு சரக்கு ஏற்றி வந்த லாரிகள், மேட்டுப்பாளையம் கனரக ஊர்தி முனையம், கோரிமேடு அருகே பட்டானுார் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டன.ஸ்டிரைக் குறித்து புதுச்சேரி லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் நேற்று இயக்கப்படவில்லை. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X