பீகாரில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரம்: உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகிறது கோவை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2019
01:47

கோவை:கோவையில், உள்ளாட்சி தேர்தல் பயன்பாட்டுக்கு, பீகாரில் இருந்து, 13 கன்டெய்னர்களில், 12,300 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வருகின்றன. இவற்றை எடுத்து வர, துப்பாக்கி ஏந்திய போலீசாருடன், மாநகராட்சி குழு, அம்மாநிலத்துக்கு சென்றுள்ளது


.தமிழகத்தில், வரும் நவ., இறுதியில், இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்த, தமிழக அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.2011 மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு, வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு, இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் பயன்படுத்திய வாக்காளர் பட்டியலை ஆதாரமாகக் கொண்டு, வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.காகித வடிவில் பட்டியல் அச்சடிப்பதற்கான உத்தரவை எதிர்பார்த்து, தேர்தல் பிரிவினர் காத்திருக்கின்றனர். ஓட்டுச்சாவடிகள் தயார் நிலை குறித்து, அலுவலர்கள் கள ஆய்வு செய்கின்றனர். கூடுதலாக தேவைப்படும் ஓட்டுச்சாவடிகளை மட்டும் தயார்படுத்த வேண்டியிருக்கிறது.தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, பீகார் மாநிலத்தில், ஐந்து மாவட்டங்களில் இருந்து பெற்றுக்கொள்ள, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.


மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனர் செல்வம் தலைமையில், 13 பேர் மற்றும் துப்பாக்கி ஏந்திய, 13 போலீசார் சென்றுள்ளனர். 13 கன்டெய்னர்களில், 12 ஆயிரத்து, 300 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்து வரப்படும்.ஒரு மாதம் போதும்தேர்தல் பிரிவினர் கூறுகையில், '2014ல் கோவையில் மேயர் இடைத்தேர்தல் நடந்த போது, ஒரு மாதமே அவகாசம் வழங்கப்பட்டது. குறுகிய காலத்துக்குள் தேர்தல் நடத்திக் காட்டினோம். தற்போது ஓட்டுச்சாவடி, வாக்காளர் பட்டியல் தயாராக இருப்பதால், தேர்தல் நடத்த அதிக நாட்கள் தேவைப்படாது. தேர்தல் அறிவிக்கை வெளியானதும், மற்ற பணிகள் ஜரூராக நடக்கும்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X