| உடைந்த மதகு வழியாக வீணாகும் மழைநீர் Dinamalar
உடைந்த மதகு வழியாக வீணாகும் மழைநீர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 செப்
2019
01:54

பொன்னேரி: -நீர்ப்பிடிப்பு பகுதியில், உடைந்த மதகு வழியாக மழைநீர் ஏரிக்கு செல்லாமல், கடலுக்கு சென்று வீணாகி வருகிறது.பொன்னேரி அடுத்த, பனப்பாக்கம் கிராமத்தில், 600 ஏக்கர் பரப்பு கொண்ட பாசன ஏரிக்கு, அருகில் நீர்ப்பிடிப்பு பகுதி வழியாக நீர்வரத்து இருந்து வந்தது.இதற்காக அப்பகுதியில், சிறிய தடுப்பணை மற்றும் இரண்டு மதகுகள் அமைக்கப்பட்டு இருந்தன.நீர்ப்பிடிப்பு பகுதியில் தேங்கும் தண்ணீர், கால்வாய் மூலம், பனப்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மதகு மற்றும் தடுப்பணைகளை, ஆறு ஆண்டுகளுக்கு முன், ஆக்கிரமிப்பாளர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.உடைப்புகளை, பொதுப்பணித் துறையினர் சீரமைப்பதில் அலட்சியம் காட்டியதால், பனப்பாக்கம் ஏரிக்கு மழைநீர் செல்லாமல், கடலுக்கு சென்று வீணாகியது. கடந்த, 10 ஆண்டுகளாக ஏரியில் நீர்வரத்து இல்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழையால், மேற்கண்ட நீர்ப்பிடிப்பு பகுதியில் தேங்கிய தண்ணீர், உடைந்த மதகுகள் வழியாக வெளியேறி, பழவேற்காடு கடலுக்கு சென்று வீணாகி வருகிறது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு, அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X