| கொலை வழக்கில் 'மாஜி' அமைச்சர் விடுதலை Dinamalar
கொலை வழக்கில் 'மாஜி' அமைச்சர் விடுதலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 செப்
2019
01:55

பொன்னேரி: -தி.மு.க., முன்னாள் அமைச்சர் சாமி உட்பட, ஏழு பேர் மீது தொடரப்பட்ட மீனவர் கொலை வழக்கில், விடுதலை செய்யப்பட்டனர்.சென்னை, திருவொற்றியூர், கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்தவர், செல்லதுரை, 42.இவரை, தி.மு.க., அமைச்சராக இருந்த சாமி, அவரது சகோதரர்கள் சங்கர், சொக்கலிங்கம் உள்ளிட்ட ஏழு பேர் கடத்தி சென்று, புதுச்சேரி அருகே கொலை செய்து வீசியதாக, 2011ல், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணை, பொன்னேரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-, 4ல் நடந்து வந்தது.வழக்கு விசாரணை முடிவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, அரசு தரப்பில் குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர்களை விடுதலை செய்வதாக, நீதிபதி, இருசன் பூங்குழி, நேற்று உத்தரவிட்டார். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சாமி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X