விடியவிடிய பெய்த கனமழையால் சென்னை தத்தளிப்பு! சாலைகள், சுரங்கபாலங்கள் மூழ்கின, ஆங்காங்கே மரங்கள் விழுந்து பாதிப்பு, வீடு இடிந்து விழுந்து பெண் பரிதாப பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

20 செப்
2019
03:17
பதிவு செய்த நாள்
செப் 20,2019 02:58

சென்னையில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரை, ஒரே நாள் இரவில், 10 செ.மீ.,க்கும்அதிகமான மழை கொட்டித் தீர்த்தது.மாதவரம், செங்குன்றம், திருவொற்றியூர், மணலி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட வட சென்னை பகுதிகளில், மிக கனமழையும், தென் சென்னை புறநகர் பகுதிகளில், மிதமான மழையும் கொட்டி தீர்த்தது.இதனால், சாலைகள், சுரங்கப்பாலங்கள், தாழ்வான பகுதிகளில், மழைநீர் தேக்கம் ஏற்பட்டது. நேற்று காலை வரை மழைநீர் வடியாததால், சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், போக்குவரத்து முடங்கியது.
மழை காரணமாக, சென்னையில், ஒரே நாளில், லஸ் சர்ச் சாலை, திருமூர்த்தி நகர், மஹாவீர் நகர் உள்ளிட்ட, 18 இடங்களில், மரங்கள் சாய்ந்தன
எழும்பூர், கெங்கு ரெட்டி சுரங்கப்பாலம், பேருந்து சாலைகள் மற்றும் உள்வட்ட சாலைகளில், மழைநீர் தேங்கியது. 14 பிரதான சாலைகளில், மழைநீர் தேங்கியதாகவும், உடனடியாக அகற்றியதாகவும், மாநகராட்சி தெரிவித்துள்ளது
சாலைகளில் மழைநீர் தேங்கியதால், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட, பிரதான சாலைகளில், நேற்று காலை, 7:00 மணி முதல், 11:00 மணி வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது
கெங்குரெட்டி சுரங்கப்பாதையில், தேங்கிய மழைநீர் அகற்றப்படாததால், அந்த சுரங்கப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல, போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வாகனங்கள் நகர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டத
போரூர் மற்றும் வானகரம் சுங்கச்சாவடியை இணைக்கும் முக்கிய சாலையாக, சமயபுரம் பிரதான சாலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், சாலையில், பள்ளங்கள் தெரியாத அளவிற்கு, மழைநீர் தேங்கி உள்ளது
வளசரவாக்கம், கைகான்குப்பம், கங்கையம்மன் கோவில் தெருவில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில், மழைநீர் தேங்கி நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
விடிய விடிய பெய்த மழையால், திருவொற்றியூரின், கலைஞர் நகர், சக்தி கணபதி நகர், ஜோதி நகர், மதுரா நகர், சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர் போன்ற, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது
பிரதான வடிகால்கள் சரியாக துார்வாரப்படாததால், மணலி விரைவு சாலையை ஒட்டிய, ஜோதி நகர், சத்தியமூர்த்தி நகர் போன்ற பகுதிகளில், முழங்கால் அளவிற்கு, மழைநீர் தேங்கி, தீவு போல் காட்சியளிப்பதால், மக்கள் வீடுகளை விட்டுவெளியேற முடியாமல் முடங்கினர்
மணலி விரைவு சாலையில் செல்லும் வாகனங்கள், மழைநீர் தேக்கத்தால், ஊர்ந்தபடி சென்றன. கார்கில் நகர், கழிவெளி நிலப்பகுதியில் கட்டப்பட்டு வரும், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், கட்டுமான பகுதியை சுற்றி, மழைநீர் தேங்கியுள்ளது
மணலியில், நீர்நிலைகள் பராமரிக்கப்பட்டு இருந்தால், குளங்களுக்கு, நீர் வரத்து இருந்தது விடிய விடிய பெய்த மழையில், கோயம்பேடு மார்க்கெட் வளாகம் முழுவதும், மழைநீர் தேங்கி, குளம் போல் காட்சியளித்தது. இதனால், வியாபாரம் பாதிக்கப்பட்டத
பாதாள சாக்கடை பணிக்காக, கிழக்கு தாம்பரத்தில் தோண்டப்பட்ட பள்ளங்கள் அருகிலேயே, மண் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், இந்த பகுதிகள் முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளித்தன.\
பள்ளிக்கு சென்ற மாணவ -- மாணவியர், அதன் மீதே நடந்து சென்றனர் இதற்கிடையே, மேலும், மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை மையம்தெரிவித்துள்ளது.இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, மாநகராட்சி தீவிரப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
சென்னையில், கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில், பெரும்பாலான இடங்களில், மழைநீர் தேக்கம் குறைந்துள்ளது. தேங்கிய இடங்களில், உடனடியாக நீர் அகற்றப்பட்டது. மரங்களும் அகற்றப்பட்டுள்ளன. பழமையான வீடுகளில் வசிப்போர், தங்கள் வீட்டின் தரத்தை ஆய்வு செய்து கொள்வது அவசியம்.தனியார் நிறுவனங்கள் வாயிலாக, ஆய்வு செய்ய முடியாதவர்கள், மாநகராட்சியின், அந்தந்த வார்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.


மாநகராட்சி அலுவலர்களே, வீட்டின் தரத்தை ஆய்வு செய்து, வசிக்கும் அளவில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவர்.கோ.பிரகாஷ், கமிஷனர், சென்னை மாநகராட்சிமின் மாற்றி வெடித்து விபத்துமடிப்பாக்கம், பாலையா கார்டன், கல்யாண கந்தசாமி தெருவில், நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த மழை காரணமாக, நேற்று காலை, பெரிய மரம் ஒன்று, வேரோடு சாய்ந்து, மின் கம்பி மேல் விழுந்தது.இதில், பாரம் தாங்காமல், மின் கம்பம் உடைந்து, அங்குள்ள, மின் மாற்றியும் வெடித்தது. காலை, 6:00 மணிக்கு, மரம் விழுந்து, மின்மாற்றி வெடித்ததால், அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மாநகராட்சி மற்றும் மின் வாரிய ஊழியர்கள், சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், நேற்று இரவு வரை, அப்பகுதியில் மின் வினியோகம் துண்டிக்கப் பட்டது.சுவர் இடிந்து விழுந்து பெண் பலிசென்னை, மண்ணடி, ஐயப்ப செட்டி தெருவைச் சேர்ந்தவர், ஜெரினா, 50. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 50 ஆண்டுகள் பழமையான ஓட்டு வீட்டில், குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், நேற்று அதிகாலை, 4:00 மணியளவில், வீட்டின் கூரையும், பக்கவாட்டு சுவரும் இடிந்து விழுந்தது. இதில், வீட்டு சுவரின் அருகில் படுத்திருந்த ஜெரினா, கட்டட இடிபாடுகளில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உள் அறையில் படுத்திருந்த, அவரது தாய் வசந்தா, 65, மகள் பாத்திமா, 22, மகன் லெனின் குமார், 14, ஆகிய மூவரும், காயமின்றி தப்பினர். எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிந்து, ஜெரினா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

- நமது நிருபர் குழு - 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-செப்-201922:02:02 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா இன்றைய சென்னையின் தேவை மரங்கள் 2000 இல் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்கள் அதிக மரங்களை கொண்ட நகரங்களாக இருந்தது. இன்று நகர்மயமாக்கலால் இரண்டு நகரங்களும் கற்பிழந்து போய் விட்டது. சென்னையை பொறுத்தவரை நகரின் நடுவில் உள்ள காடு பொக்கிஷமாக பாதுகாக்க படவேண்டும், மேலும் அங்கு இருந்த, இருக்கும் நீர் நிலைகள் மீட்கப்பட வேண்டும். புறநகர் சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதி அபிவிருத்தி செய்யப்பட்டு குறிப்பாக மென்பொருள் நிறுவனங்களுக்கு இயற்கையான சூழலில் நகரை விட்டு சற்று தள்ளி இயங்க இடம் தர வேண்டும். கான்க்ரீட் காடுகள் 1 % கூட எந்த பயனும் தராது என்பதை உணர்ந்து முடிந்தவரை புல் தரைகள் இட்டு (நிலத்தடி நீர் மேலாண்மைக்காக) மேலை நாடுகளில் செய்வது போல பராமரிக்க சட்டம் வேண்டும். இதை எல்லாம் மக்கள் நிம்மதியாக செய்ய சரியான கழிவு நீர் மற்றும் கழிவு மேலாண்மைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.அரசால் 100 % இதை செய்ய முடியாவிட்டால், பெரு நிறுவங்கள் மூலம் அதனை செயல்படுத்தி, ஒரு வாரியத்தை ஏற்படுத்தி அதன் மூலம் நிர்வகிக்கலாம். மருத்துவ மனைகள், மற்றும் கல்வி நிறுவனங்களையே தனியாரிடம் கொடுத்துவிட்டோம், குப்பையையும், கழிவு நீரையும் தந்தால் என்ன தவறு?
Rate this:
Share this comment
Cancel
Gopal - Jakarta,இந்தோனேசியா
20-செப்-201907:40:31 IST Report Abuse
Gopal ஊழல் அரசியல் வாதிகள் இருக்கும் வரை சென்னை நகரம் உருப்படாது.
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
20-செப்-201906:39:11 IST Report Abuse
Nathan அதென்ன லஸ் சர்ச் சாலை. மதக் குறிப்பை நீக்கி லஸ் சாலை என்றால் பத்தாதோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X