| பூண்டி நீர்த்தேக்கத்தில் ஒரே நாளில் நீர் வரத்து கனிசமாக அதிகரிப்பு Dinamalar
பூண்டி நீர்த்தேக்கத்தில் ஒரே நாளில் நீர் வரத்து கனிசமாக அதிகரிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 செப்
2019
23:27

திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் கொட்டித் தீர்த்த மழையால், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்து, ஒரே நாளில், 193 கன அடி அதிகரித்தது.சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, 75 ஆண்டு களுக்கு முன், பூண்டி அருகே, கொற்றலை ஆற்றின் நடுவில், நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. மொத்தம், 3,231 மி.கன அடி கொள்ளளவு உடையது.இந்த நீர்த்தேக்கத்திற்கு, நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் பருவ மழை, கொற்றலை ஆற்றில் வரும் தண்ணீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் ஆகியவை பிரதான நீராதாரம்.இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டு, இதுவரை, நான்கைந்து முறை மட்டுமே நிரம்பி வழிந்தது.கடைசியாக, 2016ம் ஆண்டு, 'வர்தா' புயலின் போது, நீர்த்தேக்கம் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது.இந்த நிலையில், திருவள்ளூர், பூண்டி உட்பட, மாவட்டத்தின் பல பகுதிகளிலும், 18ம் தேதி இரவு முழுவதும், தொடர்ந்து மழை பெய்தது. இதனால் திருவள்ளூரில், 21; பூண்டியில், 20 செ.மீ., மழை அளவு பதிவாகியது.மேலும், திருத்தணி, கடம்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழைநீர், கொற்றலை, நந்தி ஆறு மூலம், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.நேற்று காலை நிலவரப்படி, பூண்டி நீர்த்தேக்கத்திற்கு, வினாடிக்கு, 2,242 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.கடந்த, 19ம் தேதி, வெறும், 15 கன அடி தண்ணீர் இருப்பு இருந்த நிலையில், நேற்று காலை, நிலவரப்படி, 208 கன அடியாக உயர்ந்தது.தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதி மூலம், தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. மேலும், மழை தொடரும்பட்சத்தில், பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X