| பாக்ஸ் நீர்நிலை சீரமைப்புக்கு செய்திக்கு விவசாயிகள் கூட்டத்தில் சரமாரி புகார் Dinamalar
பாக்ஸ் நீர்நிலை சீரமைப்புக்கு செய்திக்கு விவசாயிகள் கூட்டத்தில் சரமாரி புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 செப்
2019
23:27

திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., பி.நாராயணன் தலைமையில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், நேற்று நடந்தது.இதில், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உட்பட, 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், வருவாய் துறையினர் மெத்தனமாக செயல்படுவதால், தற்போது பெய்து வரும் கனமழையிலும், பல ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லாமல் உள்ளது.இதற்கு காரணம், நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற, வருவாய் துறையினர் முன்வராததே காரணம் என, விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.அதே போல், பிரதமர், மோடி அறிவித்த, விவசாயிகளுக்கு, 6,000 ரூபாய் உதவித்தொகை பட்டியலில், பல விவசாயிகளின் பெயர்கள் விடுபட்டுள்ளன என, புகார் மனு அளித்தனர்.அதேபோல், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்காக, பொன்னேரி, ஆர்.டி.ஓ., நந்தகுமார் தலைமையில், விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.கூட்டத்தில், நாலுார் ஏரிக்கு செல்லும் கால்வாய்களை துார் வார வேண்டும். தேவம்பட்டு மற்றும் சாலை கிராமத்தில், விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணமீன் மற்றும் இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும் உட்பட, பல பிரச்னைகளுக்கு, விவசாயிகள் மனு அளித்தனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X