தமிழக அதிகாரிகள் ஆந்திர அணையில் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2019
23:28

பள்ளிப்பட்டு: ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே, தமிழகத்திற்குள் நுழைகிறது.பள்ளிப்பட்டில் இருந்து கொற்றலை நதியாக உருவெடுத்து, புண்ணியம், சிவாடா வழியாக பாய்ந்து, பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது. கடந்த ஒரு வார காலமாக, பள்ளிப்பட்டு மற்றும் ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் அணை முழுவதுமாக நிரம்பியதை அடுத்து, இரவு, 10:00 மணியளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதனால், கொற்றலை ஆற்றில் வெள்ளம் பாய்ந்து, அதிகாலை, 5:00 மணியளவில் நீர்திறப்பு நிறுத்தப்பட்டது.இந்நிலையில், நேற்று மாலை, திருத்தணி கோட்டாட்சியர் நாராயணன் மற்றும் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் மீனா உள்ளிட்டோர், கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.சித்துார் மாவட்ட பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரலு உடன், நீர்திறப்பு குறித்து விவாதித்தனர்.செயற்பொறியாளர், வெங்கடேஸ்வரலு கூறியதாவது:அணைக்கு தற்போது நீர்வரத்து குறைந்துஉள்ளது. அதனால், ஷட்டர் அடைக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் பட்சத்தில் மீண்டும் தண்ணீர் திறந்து விடப்படும். அப்போது தமிழக அதிகாரிகளுக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X