குடிநீர்கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2019
01:45

தேவதானப்பட்டி : எருமலைநாயக்கன்பட்டியில் சீராக குடிநீர் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் சார்பில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.



பெரியகுளம் ஒன்றியம் எருமலைநாயக்கன்பட்டியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களின் தேவைக்காக 2 கிலோ மீட்டர் துாரம் உள்ள வேட்டுவன்குளம் கண்மாயில் 'போர்வெல் 'அமைத்து 25 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் போதுமான குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.



இந்நிலையில் தினமும் குடிநீர் சப்ளை சீராக வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் சார்பில், ஊராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டம் நடந்தது. தாலுகாக்குழு உறுப்பினர் காளிச்சாமி, கிளைச்செயலாளர் பால்பாண்டி தலைமை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க தாலுகா செயலாளர் முத்துக்கிருஷ்ணன் வரவேற்றார். தெற்கு தாலுகா செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



பி.டி.ஓ. எபி, டி.எஸ்.பி.ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் குருவெங்கடேஷ் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதனைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X