தேர்தல் பணி ஊதியம் வழங்காததால் அரசு அலுவலர்கள் அதிருப்தி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2019
01:47

தேனி : மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட்ட பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கு ஆறு மாதங்களாகியும் ஊதியம் வழங்காததால் அதிருப்தியில் உள்ளனர்.



லோக்சபா தேர்தலில் விதிமீறல்களை கண்டறிய பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ சர்வைலன்ஸ், செலவு கணக்கு தணிக்கை குழு, கண்காணிப்பாளர்கள், மைக்ரோ அப்சர்வர்கள் என சட்டசபை தொகுதி வாரியாக அமைக்கப்பட்ட குழுவில் அலுவலர்கள், மார்ச் 10 ம்தேதி முதல் மே 23 ம் தேதி வரை தேர்தல் பணியாற்றினர். அவர்களின் பதவிக்கு ஏற்ப அடிப்படை சம்பளத்தை யொட்டி ஊதியம் நிர்ணயம் செய்தனர்.



அலுவலர்களுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.33 ஆயிரம் முதல் உதவி யாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை வழங்க தேர்தல் கமிஷன் உத்தரவிட் டிருந்தது. தேர்தல் முடிந்து ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்தல் பணிக்கான ஊதியம் வழங்கவில்லை. இதனால் அதிருப்தியில் உள்ளனர். தேர்தல் பிரிவு அலுவலர் கூறுகையில், ' தேர்தல் பணியாற்றிய அலுவலர்கள், அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் போன்ற விபரங்களுடன் தமிழக தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பி , அது இந்திய தேர்தல் கமிஷனுக்கும் சென்று விட்டது.



படிப்படியாக தொகை வரவர வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் டிரைவர்களுக்கு தேர்தல் ஊதியம் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும், 'என்றனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X