தேர்தல் கமிஷன் கடிதத்தால் என்.ஆர்.காங்கிரசுக்கு நெருக்கடி: பதவி கிடைக்கும் என கட்சி பிரமுகர்கள் உற்சாகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 செப்
2019
14:25
பதிவு செய்த நாள்
செப் 21,2019 02:08

புதுச்சேரி : நிர்வாகிகள் பட்டியலை சமர்ப்பிக்குமாறு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி உள்ளதால், என்.ஆர். காங்., கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


காங்., ஆட்சியில் அமைச்சர், முதல்வர் உள்ளிட்ட பதவிகளை வகித்த ரங்கசாமி, கடந்த 2011ம் ஆண்டில் அக்கட்சியில் இருந்து விலகினார். அதே ஆண்டு பிப்ரவரி 11ம் தேதியன்று, அகில இந்திய என்.ஆர். காங்., என்ற புதிய கட்சியை துவக்கினார். புதிய கட்சியின் தலைவராக ரங்கசாமியும், மாநில அளவில் புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். கட்சி துவக்கிய சில மாதங்களிலேயே சட்டசபை தேர்தலை சந்தித்த என்.ஆர். காங்., கட்சி, காங்., கட்சியை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றியது.


ஆட்சியில் அமர்ந்தவு டன், என்.ஆர். காங்., கட்சி தொடர்பான நடவடிக்கைகளில் பெரும் தொய்வு ஏற்பட்டது. மாநில நிர்வாகிகளை தவிர்த்து, தொகுதி தலைவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. அணிகளின் பொறுப்பாளர்களும் அறிவிக்கப்படவில்லை. ஆட்சி அமைந்த பின் நடத்தப்பட்ட கட்சி தொடர்பான கூட்டங்களையும் விரல் விட்டு எண்ணி விடலாம்.இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்., கட்சியிடம் என்.ஆர். காங்., கட்சி தோல்வியை தழுவியது.


எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தபோதும், காங்., ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யாமல் மவுனம் காத்து வருகின்ற என்.ஆர். காங்., கட்சி, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் தோல்வியை சந்தித்தது.இருந்தபோதும், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் புதிய நிர்வாகிகளும் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே, மாநில நிர்வாகிகளாக இருந்த அங்காளன் உள்ளிட்டோர் என்.ஆர். காங்., கட்சியில் இருந்து விலகி விட்டனர். சில நிர்வாகிகள் இறந்து விட்டனர்.


இவர்களுக்கு பதிலாகவும் யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால், அக்கட்சியில் உள்ள பிரமுகர்கள் சோர்வடைந்துள்ளனர்.இந்நிலையில், கட்சியின் விதிமுறைகள்படி புதிய நிர்வாகிகள் பட்டியலை சமர்ப்பிக்குமாறு என்.ஆர். காங்., கட்சிக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியது. நிர்வாகிகள் பட்டியல் அனுப்பப்படாததால், தேர்தல் கமிஷன் மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பி உள்ளது. இதனால், புதிய நிர்வாகிகள் பட்டியலை அனுப்ப வேண்டிய நெருக்கடி என்.ஆர். காங்., கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.கட்சி தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இனியாவது தங்க ளுக்கு பதவி கிடைத்துவிடும் என அக்கட்சி பிரமுகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X