தத்துவங்களை எடுத்துரைக்கும் நவராத்திரி சர்வோதய சங்கத்தில் கண்கவர் கண்காட்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2019
02:37

விருதுநகர் : ஆதிபராசக்தி தேவி ஆனவள் அரக்க குணம் படைத்த மகிசாசூரனை அளிக்க 9 நாட்கள் விரதமிருப்பாள். இதை நாம் நவராத்திரி விழாவாக கொலு வைத்து கொண்டாடுகிறோம். இதில் கொலு பொம்மைகள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கும்.



புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் துவங்கி நவமி வரை 9 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. பெண்கள் விரும்பி செய்யும் தெய்வீக திருவிழாவாகும். இந்நாட்களில் வீட்டை அலங்கரித்து கொலு அமைத்து வீட்டிற்கு சுமங்கலி பெண்கள், கன்னி பெண்களை அழைத்து தாம்பூலம் கொடுத்து மரியாதை செய்வர்.



சுண்டல், பருப்பு போன்ற பிரசாதங்களும் வழங்குவர். நவராத்திரி முதல் 3 நாட்களில் தைரியத்தை வேண்டி பராசக்தியை வழிபட வேண்டும். அடுத்த 3 நாட்களுக்கு செல்வத்தை வேண்டி மகாலெட்சுமியை வழிபட வேண்டும். இறுதி 3 நாட்களில் கல்வி, அறிவு, கலை வேண்டி சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். முன்னோர்கள் வழிபடும் கொலுபடிக்கு ஒரு வரலாறு உண்டு. கொலுவில் ஒன்பது படிகள் வைக்கலாம். ஒன்பது படிகள் வைக்க முடியாதவர்கள் முப்பெரும் தேவியை குறிக்கும் வகையில் 3 படிகள் வைக்கலாம்.




சக்தியின் சக்கரமான 5 படிகளையும் வைக்கலாம். சப்த மாதர்களை குறிக்கும் 7 படிகளும் வைக்கலாம். கொலுப்படிகளில் முதல் படியில் ஓரறிவு உயிரினமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் வைக்கப்படுகிறது. 2ம் படியில் இரண்டறிவான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் வைக்கப்படுகிறது. 3ம் படியில் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் வைக்கப்படுகிறது. 4 வது படியில் நண்டு, வண்டு என பொம்மைகள் வைக்கப்படுகிறது. 5ம் படியில் விலங்குகள், பறவைகள் வைக்கப்படுகிறது.



6ம் படியில் மனித பொம்மைகள், 7ம் படியில் மகாரிஷிகளின் படங்கள் (ரமணர், வள்ளலார்) வைக்கப்படுகிறது. 8ம் படியில் தேவர்களின் உருவங்கள், நவக்கிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்கள், 9ம் படியில் மும்மூர்த்திகளான பிரம்மா, சிவன், விஷ்ணு, சரஸ்வதி, லெட்சுமி, சக்தி தேவி ஆகிய தெய்வங்கள் வைக்கப்படுகிறது. நவராத்திரி கொலுவானது, மனிதன் பல்லுயிர்களுடன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என தத்துவத்தை சொல்கிறது.



ஒவ்வொரு ஆண்டும் விருதுநகரில் சர்வோதய சங்கத்தின் கதர்பவனில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி, விற்பனை நடத்தப்படுகிறது. இந்தாண்டும் செப். 13ல் துவங்கி உள்ளது. குழுபொம்மைகளில் புது வரவாக சோட்டா பீம் செட், கிருஷ்ண போஜனம், விநாயகர் போஜனம், தசாவதாரம், நவசக்தி, ஆண்டாள் திருக்கல்யாணம், மீனாட்சி பிறப்பு, அகலிகை சாபவிமோசனம், வளைகாப்பு, காமதேனு ஆகிய 'செட்'கள் வந்துள்ளன.



தனி பொம்மைகளாக ஹயக்ரீவர், சாய்பாபா, குடை விநாயகர், பால அம்பிகை, தவழும் கிருஷ்ணர், கற்பக விருட்சம் ஆகியவை வந்துள்ளன. கடவுள்களின் குழந்தை பொம்மைகள் குழந்தைகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. அக். 7 வரை இக்கண்காட்சி, விற்பனை நடக்கிறது. தொடர்புக்கு 94890 79042, 04562 245 163.


 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X