| பொது செய்திகள் Dinamalar
பொது செய்திகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2019
02:38

30 ஆண்டுகளாக கண்காட்சி

கொலு பொம்மைகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கிறது. மாயவரம், கடலுார், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காதி தொழிலாளர்கள் செய்யப்பட்ட மண்பொம்மைகள் இங்கு வந்துள்ளன. 30 ஆண்டுகளுக்கு மேலாக கொலு கண்காட்சி நடத்தி வருகிறோம். தொடர் வாடிக்கையாளர்கள் தங்களது அலைபேசி எண் கொடுத்து பொம்மைகள் வந்த பின் அழைக்க கூறுவார்கள்.

டி.உதயன், மேலாளர், சர்வோதய சங்கம், கதர்பவன், விருதுநகர்.

ரூ.60 முதல் ரூ.3,500 வரை

எங்களிடம் நுாற்றுக்கு மேற்பட்ட வகைகளில் பொம்மைகள் உள்ளது. இந்தாண்டு வந்துள்ள பொம்மைகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். 10 சதவீதம் தள்ளுபடியில விற்பனை செய்து வருகிறோம். ரூ.60 முதல் ரூ.3,500 வரை பொம்மைகள் கிடைக்கின்றன. குழு பொம்மைகள், தனி பொம்மைகளும் கிடைக்கின்றன.

சித்ரா, காதி ஊழியர், கதர் பவன், விருதுநகர்.

அனைத்தும் தரமானவையே

ஒவ்வொரு ஆண்டும் கண்காட்சியை பார்க்கிறோம். விருதுநகரில் இங்குதான் தரமான பொம்மைகள் கிடைப்பதால் நவராத்திரி வழிபாட்டிற்காக பொம்மைகள் வாங்கி செல்கிறோம். தள்ளுபடி விலையில் விற்கபடுவதால் ஏழை வீட்டினரும் பயன்பெற முடிகிறது.

சண்முகநாதன், ஓய்வு அரசு ஊழியர் , விருதுநகர்.

வியப்பை தருகின்றன

4 முதல் 5 ஆண்டுகளாக கதர்பவன் வாடிக்கையாளராக இருந்து வருகிறோம்.

பொம்மைகள் தவிர அனைத்து வகையான பொருட்களும் வாங்குகிறேன். இந்தாண்டு புதுவரவுகள் மிகவும் வியப்புடன் அழகையும் சேர்த்தே தருகின்றன. நிச்சயம் அதிக பொம்மைகள் வாங்குவேன்.

இந்திரா, குடும்பத்தலைவி, விருதுநகர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X