விசாரணை கைதி இறந்த வழக்கு சிறை கண்காணிப்பாளர் சரண்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2019
02:49

புதுச்சேரி : விசாரணை கைதி இறந்த வழக்கில், தலைமறைவாக இருந்த சிறை கண்காணிப்பாளர் நேற்று கோர்ட்டில்சரணடைந்தார்.


கடலுார் மாவட்டம், ரெட்டிச்சாவடி அடுத்த கரிக்கன் நகரை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் ஜெயமூர்த்தி,22; இவரை, கடந்த நவம்பர் 21ம் தேதி பைக் திருட்டு வழக்கில், பாகூர் போலீசார் கைது செய்து, 23ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அங்கு அவர் உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.


இதுகுறித்து நீதிபதி சரண்யா விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் பேரில், பாகூர் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன், உதவி சப் இன்ஸ்பெக்டர் திருமால், காலாப்பட்டு சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறை டாக்டர் வெங்கட ரமண நாயக் ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இவ்வழக்கு பி.சி.ஆர்., பிரிவிற்கு மாற்றப்பட்டது.இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வழக்கு டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், வழக்கை நான்கு மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டார்.அதன்பேரில் பி.சி.ஆர்., போலீசார், தலைமறைவாக உள்ள சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் உள்ளிட்ட நான்கு பேரை தேடிவந்தனர்.



இந்நிலையில் சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், டாக்டர் வெங்கட ரமண நாயக் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை கடந்த 17ம் தேதி தள்ளுபடி செய்த நீதிபதி, இவ்வழக்கில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத புதுச்சேரி அரசுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, அதனை பாதிக்கப்பட்ட ஜெயமூர்த்தியின் மனைவி கவுசல்யாவிற்கு வழங்க உத்தரவிட்டார்.இந்நிலையில் வழக்கில் தேடப்பட்டு வந்த சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், நேற்று புதுச்சேரி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சுபாஅன்புமணி முன் சரணடைந்தார்.


அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து பாஸ்கரன், காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.வழக்கில் தலைமறைவாகஉள்ள சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன், உதவி சப் இன்ஸ்பெக்டர் திருமால், சிறை டாக்டர் வெங்கட ரமண நாயக் ஆகியோரை பி.சி.ஆர்., போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X