| நல்லுார் ஏரியில் தண்ணீர் வீணாகிறது அதிகாரிகள் கவனிப்பார்களா ? Dinamalar
நல்லுார் ஏரியில் தண்ணீர் வீணாகிறது அதிகாரிகள் கவனிப்பார்களா ?
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2019
02:50

திருபுவனை : மதகடிப்பட்டு அருகே உள்ள நல்லுார் ஏரியில் சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பிய தண்ணீர் விளைநிலைங்களுக்கு பயன்படாமல் வீணாக வெளியேறி வருகிறது.



புதுச்சேரி மதகடிப்பட்டு அடுத்த நல்லுாரில் 150 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஏரி உள்ளது. கடந்த காலங்களில் ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால் கிராம விவசாயிகள் ஒரு போகத்திற்கு முழுமையாக பாசன வசதி பெறுவர். ஏரியில் நீர் பிடிப்பு குறைந்தாலும், அருகில் உள்ள விவசாயிகள் ஒன்றரை மாதங்களுக்கு ஏரி தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் நிலை இருந்து வந்தது.மனைகளாக மாறிய விலை நிலங்கள்: இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நல்லுார் கிராமத்தில் ஏரிக்கு கிழக்கே உள்ள மூன்று போகமும் விவசாயம் செழித்த விலைநிலங்களில் பெரும்பாலானவற்றை 'ரியல் எஸ்டேட்' வியாபாரிகள் விலைக்கு வாங்கி வீட்டு மனைகளுக்கு பிளாட்போட்டு விற்பனை செய்து விட்டனர்.



இப்பகுதியில் தற்போது விவசாய நிலைங்கள் 30 சதவீதம் அளவிற்கே எஞ்சியுள்ளது.ஏரி முழு கொள்ளளவும் தண்ணீர் நிரம்பி, அதை சிக்கனாமாக பயன்படுத்தினால், தற்போது குறைந்த அளவில் உள்ள விலைநிலங்களுக்கு இரண்டு போகத்திற்கு பயன்படுத்த முடியும்.சமீபத்தில் பெய்த கனமழையால் ஏரியின் மொத்த கொள்ளளவில் 50சதவீதம் அளவிற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகள் ஏரியில் நிரம்பிய தண்ணீரை பாதுகாத்து பராமரிக்க தவறியதால், ஏரியில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.


விவசாயிகள் பயன்பெறவும், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பற்றாக்குறை நீங்கவும், நல்லுார் ஏரியில் நிரம்பியுள்ள தண்ணீரை பாதுகாக்க மதகை அடைத்து, விவசாயபயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X